சியோமி நிறுவனத்தின் MET7 என்ற குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் சீன வலைதளத்தில் கசிந்துள்ளது. இது ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போனினை ஆகஸ்டு மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தற்சமயம் சீனாவின் TENAA தளத்தில் MET7 என்ற குறியீட்டு பெயரில் சியோமி ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டுள்ளது. இது ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் ஃபுல் ஸ்கிரீன் 18:9 டிஸ்ப்ளே, மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, கேமரா மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது. எனினும் டூயல் பிரைமரி கேமரா காணப்படவில்லை என்பதால், இது ரெட்மி நோட் 5 ப்ரோ அல்லது ரெட்மி நோட் 5 பிளஸ் பதிப்பாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் முழுமையான சிறப்பம்சங்கள் வெளியாகாத நிலையில் இதில் 5.5 இன்ச் FHD+18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் மற்றும் 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 12 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்படுகிறது.
ரெட்மி நோட் 5 ப்ரோ அல்லது ரெட்மி நோட் 5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகியுள்ள புகைப்படங்களில் இந்த ஸ்மார்ட்போன் ஷேம்பெயின் கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் காட்சியளிக்கிறது.
எனினும் புதிய ஸ்மார்ட்போன்கள் ரோஸ் கோல்டு மற்றும் பிளாட்டினம் சில்வர் நிறங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.