தரமான மருத்துவ தேவையை வலியுறுத்துவதால் ‘மெர்சல்’ படம் தன்னை கவர்ந்ததாக மத்திய தணிக்கை குழு உறுப்பினரும், நடிகையுமான கௌதமி கருத்து தெரிவித்துள்ளார்.
‘மெர்சல்’ படத்துக்கு நடிகையும், மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்களில் ஒருவருமான நடிகை கௌதமி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மெர்சல் படத்தை நான் பார்த்தேன். ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட சில விஷயங்களை தப்பாக எடுத்துக்கொள்ள எனக்கு அவ்வளவு பெரிய காரணம் எதுவும் தெரியவில்லை.
எனக்கு இந்த படத்தில் அடிப்படையான ஒரு விஷயம் மட்டும் அல்லாமல், ரொம்ப ஆழமாக தெரியும் விஷயம் என்னவென்றால் நமக்கு தரமான மருத்துவம் தேவை. கதை அதனை வலியுறுத்துவதால் மெர்சல் படம் என்னை கவர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.