விக்டோரிய மாநிலத்தில் Euthanasia எனப்படும் கருணைக் கொலையை சட்டமாக்குவதற்கு நாடாளுமன்றம் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
சர்ச்சைக்குரிய கருணைக் கொலையை ஆதரிக்கும் சட்டம், 24 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த விவாதத்திற்குப் பின்னர் விக்டோரிய நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் 47 பேர் ஆதரவு தெரிவித்தும் 37 பேர் எதிர்ப்புத் தெரிவித்து வாக்களித்துள்ளதாக தெரியவருகிறது.
பெரும்பான்மையான Labor கட்சி உறுப்பினர்கள், இரு Greens கட்சியினர், இரண்டு சுயேச்சைகள் மற்றும் சில Coalition நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவத்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த சட்டமூலம் தற்போது 40 உறுப்பினர்களை கொண்ட விக்டோரிய மேல் சபையில் தீர்வானால் மட்டுமே சட்டமாக்கப்படும் என தெரியவருகிறது.
இதேவேளை 18 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், கடுமையான வலியை அனுபவிப்பவர்களாகவும், ஒரு வருடம் மட்டுமே உயிர் வாழலாம் என்ற நிலையில் இருப்பவர்கள் மட்டுமே கருணைக் கொலை செய்யப்படுவதற்கு இந்த சட்டமூலம் அனுமதி அளித்துள்ளதாக தெரியவருகிறது.