அமெரிக்காவுடனான உடன்பாடுகளை அவுஸ்ரேலியா நீக்கவேண்டும் என வடகொரிய கடிதம் அனுப்பியுள்ளது.
உலக சமாதானத்தை நிலைநாட்டவும், போரைத் தவிர்ப்பதற்காகவும் அமெரிக்காவுடனான உடன்பாடுகளை நீக்கவேண்டுமென மேலும் குறித்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் உறுதி செய்துள்ளார்.இந்தோனேஸியாவிலுள்ள வடகொரிய தூதரகமூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அணுகுண்டு அச்சுறுத்தல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. முழு உலகின் இழப்பில் அமெரிக்கா நன்மையடையும் என்ற அமெரிக்க சிந்தனையையே டிரம்பின் வார்த்தைகள் பிரதிபலிக்கிறது என வடகொரியா சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் அணு ஆயுதப் போர் என்று அச்சுறுத்துவதன் மூலம் வடகொரியாவை வீழ்த்திவிட முடியுமென்று டிரம்ப் நினைத்தால், அது மிகப் பெரிய தவறு எனவும் குறித்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.