குமரன்

ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் எவ்வாறு செயற்பட வேண்டும்?

ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பது தொடர்பில் சுகாதார அமைச்சினால் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இதற்கு அமைவாக வைரஸ் தொற்று காலத்துக்கு முன்பு போல் அல்லாமல் அதன் பின்னர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை நாம் சிந்தித்து செயல்படுவது அவசியம் என்று தெரிவித்த அவர், குறிப்பாக அரச ,அரச சார்பற்ற மற்றும் ஏனைய நிறுவனங்கள் கைத்தொழில் துறை நிறுவனங்கள் உட்பட அத்தியவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். தமிழ், சிங்களம், ...

Read More »

பொதுத் தேர்தல் தள்ளிப்போகும்!

ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் 20ஆம் திகதிக்கு நாள் குறிக்கப்பட்ட பொதுத் தேர்தல், அன்று முதல் 3 அல்லது 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக, அரசாங்கம் அறிவித்தது. அந்த வகையில், ஜூலை 4ஆம் திகதியன்றே தேர்தலை நடத்துவதற்கான மிக நெருங்கிய காலப்பகுதியாயினும், தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் போதிய நாள்கள் தேவைப்படுவதால், ஜூலை 4ஆம் திகதியன்றும் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லையென்றும் தெரிவித்தது. இது தொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும, எவ்வாறாயினும் இம்மாதம் 11ஆம் திகதியன்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ...

Read More »

கோத்தா கிங்கா? கிம்மா?

இலங்கை அரசியலில், ராஜபக்‌ஷ குடும்பம் மீண்டும் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து, சிறப்புச் செயலணியின் விசேட தூதுவராக பசில் ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு வரை ராஜபக்‌ஷ குடும்பம் எந்தளவுக்கு அதிகாரத்தில் இருந்ததோ, அதைவிடக் கூடுதல் ஆதிக்கத்தைப் பெற்றிருக்கிறது. இப்போது, ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் அமைச்சராக சமல் ராஜபக்‌ஷவும் பதவிவகிக்கையில் இவர்களுடன் பசில் ராஜபக்‌ஷவும் இணைந்திருக்கிறார். இதையடுத்து, குடும்ப ஆதிக்கம் தலைதூக்கியிருகிறது என்ற பொதுவான குற்றச்சாட்டுகளைக் கண்டுகொள்ளாமல், ஆட்சியை வலுப்படுத்துவதில் இறங்கியிருக்கிறது ராஜபக்‌ஷ ...

Read More »

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் எங்கே?

கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடியாமல் அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் 165 பேர், சிறிலங்கா  விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம், பங்களாதேஷூக்கு அனுப்பி வைப்பதற்காக, நேற்று (08) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியா-மெல்பன் நகரிலிருந்து யு.எல் 605 என்ற விமானமே  கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளது. அவுஸ்திரேலியா- மெல்பன் நகரிலிருந்து பங்களாதேஷ் டாக்கா நகருக்கு சர்வதேச விமான போக்குவரத்து மார்க்கம் இல்லாததால், இந்த பயணிகள் அவுஸ்திரேலியாவிலிருந்து கட்டுநாயக்கவுக்கு அழைத்துவரப்பட்டு இங்கிருந்து பங்களாதேஷ் நோக்கி சிறிலங்கா விமான சேவைக்குரிய விசேட  விமானம் ...

Read More »

ஆப்பிரிக்காவில் 1,90,000 பேர் பலியாவார்கள்

ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு கொரோனா வைரசுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் வரை பலியாவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆப்பிரிக்காவுக்கான பிராந்திய அலுவலகம், ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதன் முடிவுகளை ஒரு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- மற்ற உலக நாடுகளைப் போல், ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ வாய்ப்பில்லை. அபாய பகுதிகளில் மட்டும் படிப்படியாக பரவும். அந்த வகையில், தடுப்பு நடவடிக்கைகள் தோல்வி அடைந்தால், ...

Read More »

விஜய் சேதுபதி மீது புகார்

பல படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி மீது கமி‌‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் மீது திருச்சி மாநகர காவல் துறை  கமி‌‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய இந்து மகாசபா மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், ‘‘நடிகர் விஜய்சேதுபதி ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கோவில்களில் கடவுள்களுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி உள்ளார். இது சமூக வலைதளங்களில் ...

Read More »

ஐடா பி.வெல்ஸ்: இதழியலின் முன்னோடி வீராங்கனை!

பத்திரிகையாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான ஐடா பி.வெல்ஸ் இறந்து 89 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இதழியல் பங்களிப்புக்கான புலிட்சர் சிறப்புப் பரிசு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவுக்கு ஆஸ்கர் விருது; இலக்கியம், பொருளாதாரம், அறிவியல் துறைகளுக்கு நோபல் பரிசு போல இதழியல் துறையின் மதிப்புக்குரிய விருதுகளில் புலிட்சர் பரிசும் ஒன்று. நாடகம், இசை உள்ளிட்ட துறைகளுக்கும் சேர்த்து மொத்தம் 22 பரிசுகள் வழங்கப்பட்டாலும் பத்திரிகைத் துறை பங்களிப்புக்கான விருது சர்வதேச கவனத்தைப் பெறுவது வழக்கம். ஆப்பிரிக்க அமெரிக்கர்களைக் கண்மூடித்தனமாக கொன்று குவித்த நாட்களில் அந்தக் கொடுமைகளை ...

Read More »

பிரான்சில் திங்கட்கிழமை ஊரடங்கை விலக்க முடிவு

பிரான்ஸ் நாட்டில் வருகிற திங்கட்கிழமை ஊரடங்கை விலக்கி கொள்ளப் போவதாக அந்நாட்டு பிரதமர் எட்வர்ட் பிலிப் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் மொத்தம் 174,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை 25,987 பேர் உயிரிழந்துள்ளனர். வைரசை கட்டுப்படுத்த மார்ச் 17-ம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது வைரஸ் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளது. நேற்று 178 பேர் மரணம் அடைந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் 3000-க்கும் குறைவான நோயாளிகளே உள்ளனர். கொரோனா ...

Read More »

கொழும்பில் இருந்து மெல்போர்ன் நோக்கி பறக்கும் விமானம்!

அவுஸ்திரேலியாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக ஸ்ரீலங்கன் வானுர்தி சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று அதிகாலை அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வானுர்தி இன்றைய தினம் மெல்போர்ன் நகரை சென்றடையவுள்ளது.  இதற்கமைய கற்றல் செயற்பாடுகளுக்காக சென்று அங்கு நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனனர். இதேவேளை, அத்தியாவசிய சுகாதார உபகரணங்கள் அடங்கிய சீனாவின் மூன்றாவது வானுர்தி இன்று நாட்டை வந்தடையவுள்ளது. கொழும்பிலுள்ள சீனா தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. 30 ஆயிரம் பி.சீ.ஆர் பரிசோதனை கட்டமைப்புக்கள், 15 ஆயிரம் பிரத்தியேக பாதுகாப்பு ஆடைகள், ...

Read More »

சம்பந்தர் விக்கினேஸ்வரனிடம் ஏமாந்துவிட்டார் ! -அருந்தவபாலன்

சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே என தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தர் விக்கினேஸ்வரனிடம் ஏமாந்துவிட்டார் என அண்மையில் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த போதே தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கொழும்பு வாழ்க்கை, மேட்டுக்குடிப் பின்னணி, தமிழ்மக்களுக்கு நன்றாக அறிமுகமான முகம், போதாக்குறைக்கு சிங்கள மணவுறவு போன்றவற்றை வைத்து தங்களைப்போல தமிழ்மக்களை ...

Read More »