அவுஸ்திரேலியாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக ஸ்ரீலங்கன் வானுர்தி சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று அதிகாலை அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வானுர்தி இன்றைய தினம் மெல்போர்ன் நகரை சென்றடையவுள்ளது. இதற்கமைய கற்றல் செயற்பாடுகளுக்காக சென்று அங்கு நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனனர்.
இதேவேளை, அத்தியாவசிய சுகாதார உபகரணங்கள் அடங்கிய சீனாவின் மூன்றாவது வானுர்தி இன்று நாட்டை வந்தடையவுள்ளது.
கொழும்பிலுள்ள சீனா தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. 30 ஆயிரம் பி.சீ.ஆர் பரிசோதனை கட்டமைப்புக்கள், 15 ஆயிரம் பிரத்தியேக பாதுகாப்பு ஆடைகள், 30 ஆயிரம் என் 95 ரக முக கவசங்கள் என்பன அந்த சுகாதார உபகரண தொகுதியில் அடங்குகின்றன.
Eelamurasu Australia Online News Portal