ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத்தின் ஊடாக நிலைத்து நிற்கும் நிலத்தடி நீர் முகாமைத்துவம் என்ற ஒரு மாத காலப் பயிற்சிநெறி அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெற்று வருகிறது. இலங்கையைச் சேர்ந்த நீர் முகாமைத்துவத்துடன் தொடர்பானவர்களுக்கென மாத்திரமே விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இப்பயிற்சிநெறியில் இலங்கையில் இருந்து 15 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். வடக்கில்; நிலத்தடி நீர் தொடர்பாக அதிக பிரச்சினைகள் நிலவுகின்ற மாவட்டமாக யாழ்ப்பாணம் உள்ளது. இதைக் கருத்திற் கொண்டு பயிற்சியில் யாழ் மாவட்டத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் இருந்து 8 பேரும் தென்இலங்கையில் இருந்து ...
Read More »குமரன்
குரங்கு சேட்டையால் ஏற்பட்ட கலவரம்: குழந்தைகள் உள்பட 16 பேர் பலி
லிபியாவில் குரங்கு ஒன்று செய்த சேட்டையால் 4 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் குழந்தைகள் பெண்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியில் இருந்து சுமார் 640 கி.மீ தொலைவில் உள்ளது பழங்குடியினர் வசிக்கும் சபா என்ற நகர் அமைந்துள்ளது. இந்நகரில் உள்ள குடியிருப்பில் குரங்கு ஒன்று செல்லமாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் குரங்குக்கு சொந்தமான 3 பேர் சாலையில் சென்ற சிறுமிகள் மீது குரங்கை ஏவி விட்டுள்ளனர். சிறுமிகள் மீது ஏறிய குரங்கு, ஒருவரின் முகத்திரையை ...
Read More »ப்ரியா பவானிஷங்கர் அவுஸ்ரேலியா செல்வது ஏன்?
தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பு செய்திகள் பல இருந்தாலும், ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் இருந்து ப்ரியா பவானிசங்கர் ஏன் விலகினார் என்று பலர் குழம்பிக் கொண்டிருக்கின்றனர். அவரது விலகல் தொடர்பாக பல தகவல்கள் உலவுகின்றன. சந்தேகம் பல எழுந்ததால், அதை தீர்த்துக்கொள்ள அவரிடமே பேச முயற்சித்தோம். ஆனால், ‘நான் இப்ப ரொம்ப பிஸி. ப்ளீஸ்… கொஞ்ச நாள் கழிச்சு நானே பேசுறேன்!’ என்பதோடு ’பை பை’ சொல்கிறார். ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலின் நாயகன் அமித்திடம் பேசினோம். “அவர் ஏன் இப்போ ...
Read More »நோய் உண்டாக்கும் பாக்டீரியாவை பரப்பும் காற்று மாசு
நோய் உண்டாக்கும் பாக்டீரியாவை காற்று மாசு பரப்புவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.காற்று மாசுபடுவதன் மூலம் சுற்றுச்சுழல் பாதிக்கப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக காற்றில் கார்பன்டை ஆக்சைடு வாயு அதிகமாக கலப்பதால் பருவநிலை மாற்றம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காற்று மாசுபடுவதன் மூலம் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் பரவுவது ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனா தலைநகர் பெய்ஜிங்கில் காற்று மாசு பெருமளவில் உள்ளது. எனவே அங்கு வாழும் மனிதர்கள், விலங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட டி.என்.ஏ. மற்றும் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட காற்று போன்றவைகள் மீது ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ...
Read More »மாவீரர் நாள் – 2016 – அவுஸ்ரேலியா
தமிழீழ தேசிய மாவீரர் நாள் -2016
Read More »கொழும்பிலும் தமிழ் மக்கள் பேரவையின் ஊடகமாநாடு
தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் கோரிக்கைகள் தொடர்பில் தெற்கு மக்களிற்கு விளக்கமளிக்க ஊடக சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்குகிழக்கில் உள்ள தமிழ் சிவில் பிரதிநிதிகளையும் கல்விமான்களையும் அரசியல் தலைவர்களையும் உள்ளடக்கியதான தமிழ் மக்கள் பேரவை அமைப்பு கடந்த 24.09.2016 இல் “எழுகதமிழ்”என்ற நிகழ்வொன்றை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்து அதில் வடக்குகிழக்கு மக்களின் அன்றாட மற்றும் அடிப்படைப்பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற ஊர்வலம் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது யாவரும் அறிந்ததே. இப் பேரணியானது தென் பகுதியில் உள்ளகுறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் பலதரப்பட்ட கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் ...
Read More »அவுஸ்ரேலிய அணியில் அதிரடி மாற்றம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் மோசமான தோல்வி எதிரொலியால் அவுஸ்ரேலிய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் 3 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் தென் ஆப்பிரிக்கா முதல் இரண்டு டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றியது. அவுஸ்ரேலிய மண்ணில் அந்த அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக தொடரை வென்று புதிய வரலாறு படைத்தது. பெர்த்தில் நடந்த முதல் ...
Read More »கெளதமியின் மறுப்பு செய்தி
திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த 13 ஆண்டுகளாக கமலுடன் இணைந்து வாழ்ந்து வந்தவர் நடிகை கெளதமி. அதோடு கமல் நடித்த பாபநாசம் படத்தில் அவரது மனைவியாக நடித்தவர், அவர் நடித்த பல படங்களில் காஸ்டி யூம் டிசைனராகவும் பணியாற்றினார். அப்படி சபாஷ் நாயுடு படத்தில் அவர் டிசைனராக ஒர்க் பண்ணியபோது கெளதமிக்கும், ஸ்ருதிஹாசனுக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் பரவின. அதை யடுத்து, சமீபத்தில் கமலை விட்டு பிரிவதாக அறிவித்த கெளதமி, தனது மகள் சுப்புலட்சுமியுடன் தனி வீட்டில் வசித்து வருகிறார். ...
Read More »ப்ருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
அணுஆயுத திறன் கொண்ட ப்ருத்வி 2 ஏவுகணையை இந்தியா, வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது . கண்டம் விட்டு கண்டம் தாவும் ப்ருத்வி 2 ஏவுகணை, இன்று காலை 9.40 மணியளவில் ஒடிசாவின் சந்திப்பூர் ஏவுகணை தளத்தில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றி அடைந்திருப்பதாக இந்திய பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. இன்று சோதனை செய்யப்பட்டுள்ள ஏவுகணை 350 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது. ப்ருத்வி 2 ஏவுகணை 500 கிலோ முதல் 1000 கிலோ வரையிலான போர் சாதனங்களை சுமந்து செல்லும் ...
Read More »தமிழ் மக்கள் பேரவையின் செய்தியாளர் மாநாடு!
தமிழ் மக்கள் பேரவையால் எதிர்வரும் 22ஆம் திகதி, இலங்கை மன்றக் கல்லூரியில் மாநாடொன்று நடாத்தப்படவுள்ளது. இம்மாநாடானது கடந்த செப்ரெம்பர் மாதம் 24ஆம் திகதி நடாத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணி தென்னிலங்கையில் ஏற்படுத்திய அதிருப்தியை தென்னிலங்கை மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாகவே நடாத்தப்படவுள்ளது என தமிழ் மக்கள் பேரவையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் சிவில் பிரதிநிதிகளையும் கல்விமான்களையும் அரசியல் தலைவர்களையும் உள்ளடக்கியதான தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பு கடந்த 24.09.2016 இல் ‘எழுக தமிழ்’ என்ற நிகழ்வொன்றை ...
Read More »