தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் கோரிக்கைகள் தொடர்பில் தெற்கு மக்களிற்கு விளக்கமளிக்க ஊடக சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்குகிழக்கில் உள்ள தமிழ் சிவில் பிரதிநிதிகளையும் கல்விமான்களையும் அரசியல் தலைவர்களையும் உள்ளடக்கியதான தமிழ் மக்கள் பேரவை அமைப்பு கடந்த 24.09.2016 இல் “எழுகதமிழ்”என்ற நிகழ்வொன்றை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்து அதில் வடக்குகிழக்கு மக்களின் அன்றாட மற்றும் அடிப்படைப்பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற ஊர்வலம் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது யாவரும் அறிந்ததே.
இப் பேரணியானது தென் பகுதியில் உள்ளகுறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் பலதரப்பட்ட கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருப்பதால் “எழுகதமிழ்”பேரணியில் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகளையும், தேவைப்பாடுகளையும் தென் பகுதியில் உள்ள மக்களுக்கு தெளிவுபடுத்துவதும் சிங்கள தமிழ் மக்களுக்கிடையில் ஆரோக்கியமானதொருஉறவைப் பேணுவதும் எமது கடைமையாகும்.
அந்த அடிப்படையில் நாங்கள் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்கள் இணைந்து ஊடகவியலாளர் மாநாடொன்றைகொழும்பு– 07 ரொறிங்டன் சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கைமன்றக் கல்லூரியில் எதிர்வரும் 22.11.2016 பிற்பகல் 04.00 மணிதொடக்கம் 06.00 மணிவரைநடாத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal