தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பு செய்திகள் பல இருந்தாலும், ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் இருந்து ப்ரியா பவானிசங்கர் ஏன் விலகினார் என்று பலர் குழம்பிக் கொண்டிருக்கின்றனர்.
அவரது விலகல் தொடர்பாக பல தகவல்கள் உலவுகின்றன. சந்தேகம் பல எழுந்ததால், அதை தீர்த்துக்கொள்ள அவரிடமே பேச முயற்சித்தோம். ஆனால், ‘நான் இப்ப ரொம்ப பிஸி. ப்ளீஸ்… கொஞ்ச நாள் கழிச்சு நானே பேசுறேன்!’
என்பதோடு ’பை பை’ சொல்கிறார். ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலின் நாயகன் அமித்திடம் பேசினோம். “அவர் ஏன் இப்போ நடிக்கலைங்கிற விஷயத்தை நான் சொன்னால் தப்பாகிடும். அதை அவரே சொன்னால் தான் சரியாக இருக்கும்” என்றார்.
அடுத்ததாக சீரியலின் இயக்குநர் முத்து செல்வனிடம் பேசிய போது, “சொந்த வேலை காரணமாக ப்ரியா அவுஸ்ரேலியா போறாங்க. அதனால் அவங்களால தொடர்ந்து நடிக்க முடியலை. ஆனா, அவங்க எதுக்காக அவுஸ்ரேலியா போறாங்கன்னு அவங்க சொல்றதுதான் சரியா இருக்கும்.
ஏன்னா, அது ரொம்ப ரொம்ப நல்ல விஷயம். அவங்களுக்கு எங்க டீம் சார்பா வாழ்த்துகள்” என்றார் இயக்குநர் முத்து செல்வன். தன் ஃபேஸ்புக் பக்கத்திலேயே தனக்கும் அவுஸ்ரேலியாவுக்குமான பிரியமான பந்தத்தை ப்ரியா வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக, நாமும் ப்ரியாவுக்கு வாழ்த்துகளை தெரிவிப்போம்!
Eelamurasu Australia Online News Portal