இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ (Joko Widodo), இந்த வார இறுதியில் அவுஸ்ரேலியா செல்லவிருக்கிறார். 2014ஆம் ஆண்டு பதவியேற்ற அவர், அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு அவுஸ்ரேலியா செல்வது இதுவே முதன்முறை. அண்மை ஆண்டுகளில் இரு நாட்டு உறவு சீராக இல்லாத நிலையில், இந்தோனேசிய அதிபர் இந்த வாரம் சனிக்கிழமை அவுஸ்ரேலியா செல்வதாகத் தகவல் வெளியானது. அதிபர் விடோடோவுடன், அமைச்சர்கள் பலரும் இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சிட்னி செல்கின்றனர். அவுஸ்ரேலியப் பிரதமர் மெல்கம் டர்ன்புல்லுடன் அதிபர் பேச்சு நடத்துவார் என்று இந்தோனேசிய வெளியுறவு ...
Read More »குமரன்
நீரை சுத்தமாக்க சூரிய சக்தி
சுத்தமான குடிநீர் கிடைக்காத வறட்சிப் பகுதிகளில், நோய் பரவும் பிரச்சனையும் ஏற்படுகிறது. எனவே, அதிக செலவில்லாமல், கிடைக்கும் குடிநீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க, கண்டுபிடிப்பாளர்கள் முயன்று வருகின்றனர். அமெரிக்காவிலுள்ள, பப்பலோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சூரிய வெப்பத்தைக் கொண்டே, அசுத்த நீரை சுத்த நீராக்கும் எளிய சாதனத்தை உருவாக்கியிருக்கின்றனர்.தக்கைப் போல நீரின் மேல் மிதக்கும், பாலிஸ்டைரின் கட்டை மீது, கார்பன் பூச்சு செய்த காகிதத்தை ஒட்டி, அந்த சாதனத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கட்டையின் மேலிருக்கும் கார்பன் காகிதம், கீழிருந்து நீரை உறிஞ்சுகிறது. அதன் கரிய ...
Read More »பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: சினேகா
நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் திரைத்துறையினரிடையே பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சினிமா துறையை சேர்ந்த பலரும் கண்டங்களையும், எதிர்ப்புக்களையும் தெரிவித்து வருகின்ற நிலையில், நடிகை சினேகாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘என்னுடைய துறையில் பணியாற்றும் சக கலைஞர்களான பாவனா மற்றும் வரலட்சுமி ஆகியோருக்கு நடந்த சம்பவங்கள் எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்து இருக்கிறது. இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன் என்பதனை உறுதிபடுத்திக்கொள்கிறேன். எந்தவித பயமின்றி நடந்ததை வெளிப்படையாக ...
Read More »அவுஸ்திரேலியாவுடனான வர்த்தகஉறவை மேலும் மேம்படுத்த எதிர்ப்பார்ப்பு!
அவுஸ்ரேலியாவுடனான வர்த்தக ரீதியான உறவை மேலும் மேம்படுத்த எதிர்ப்பார்த்திருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இஸ்ரேல் பிரதமர், அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார் குறித்த சந்திப்பை தொடர்ந்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய பிரதமர், ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி என இரு நாடுகளும் ஒரே மதிப்பை கொண்டுள்ளது. அதன்படி, இரு நாடுகளும் ஒன்றிணைந்து பல்வேறு விடயங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இரு நாடுகளும் புதிய சாதனைகளுடன், எமது ...
Read More »பூமி அளவில் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிப்பு
வரலாற்றில் முதன் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு கோள்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்த கோள்களில் மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதாக தற்போது வரை கிடைத்திருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. குறித்த கோள்களில் நீர் மற்றும் வாழக்கூடிய தன்மைகள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என விண்வெளிஆராய்ச்சியாளர் மைக்கேல் கில்லான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வானியல் ஆரய்ச்சியாளர்கள் ஏழு கோள்களை கண்டுபிடித்துள்ளனர். எனினும் அவை அனைத்தும் பூமி அளவில் இருக்கவில்லை இதனால் பூமி அளவு கொண்ட ...
Read More »அவுஸ்ரேலியா நிதான ஆட்டம்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதலில் விளையாடி வரும் அவுஸ்ரேலிய அணி துவக்க விக்கெட்டுகளை இழந்த நிலையில் நிதானமாக விளையாடி வருகிறது. ஸ்டீவன் ஸ்மித் தலைமையில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று தொடங்கியது. வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடிய புவனேஸ்வர் குமார் 11 பேர் கொண்ட அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இடத்தில் புதுமுக வீரர் ஜெயந்த் யாதவ் ...
Read More »இந்திய -அவுஸ்ரேலியா மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆரம்பமாகியது
இந்திய – அவுஸ்ரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மராட்டியமாநிலம் புனேயில் இன்று ஆரம்பமாகியது. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலிய அணி 53 ஓட்டங்களைப்பெற்று ஆடிவருகின்றது. ஸ்மித் தலைமையிலான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சமீப காலமாக டெஸ்ட்போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. இலங்கை (2-1), தென்னாபிரிக்கா (3–0), மேற்கிந்தியத் தீவுகள் ...
Read More »அவுஸ்ரேலியாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்!
8 வயது சிறுவன் ஒருவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை மற்றும் ஆயுதத்தைக் காண்பித்து கொலை அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 10 வயது சிறுவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டு சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. பேர்த் நகரின் வட புறநகரப் பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட சிறுவன் தன்னை விடவும் இரு வயது இளமையான சிறுவனை கத்தியைக் காண்பித்து கொலை அச்சுறுத்தல் விடுத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். பேர்த் சிறுவர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி, ...
Read More »அவுஸ்திரேலியா : தொடரை வென்றது இலங்கை
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி இருபதுக்கு – 20 போட்டியில், இலங்கை அணி 41 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியுள்ளது. எனினும் முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இலங்கை அணி 2-1 என தொடரை கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இந்நிலையில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப வீரர்களான அரோன் பின்ஜ் (53 ஓட்டங்கள்) மற்றும் மிச்சல் கிளிஞ்ஞர் ...
Read More »அடக்கி வாசிக்க நினைத்தாலும் பேச வைக்கிறார்கள்
தனது நற்பணி இயக்கத்தை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டதற்கு கமல் ஆக்ரோஷத்துடன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி, தற்போது நடைபெற்று வரும் அரசியல் சூழல் வரை கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவரின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்து விமர்சித்ததற்காக கமல் நற்பணி இயக்கத்தை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, இனி மக்கள் ...
Read More »