ஆஸ்திரேலிய லெவனுடனான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கோலி, பிரித்வி ஷா, புஜாரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 4 டெஸ்ட் கொண்ட தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு ஆஸ்திரேலிய லெவனுடன் இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது. அதன்படி நேற்று சிட்னியில் ...
Read More »குமரன்
பிரதி சபாநாயகர் தலைமையில் விஷேட விசாரணைக் குழு நியமனம்!
நாடாளுமன்றில் கடந்த 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடந்த முறையற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள பிரதி சபாநயாகர் தலைமையில் குழு நியமனம். நாடாளுமன்றம் இன்ற காலை 10.30 மணியளவில் கூடிய வேளையில் சபாநாயகர் குறித்த விடயத்தை தெரிவித்தார்.
Read More »மஹிந்தவுக்கு எதிராக மற்றுமோர் மனு!
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது சட்டத்துக்கு எதிரானது என உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மற்றொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவை தம்பர அமில தேரர் இந்த தாக்கல் செய்துள்ளார். மனுவில் பிரதிவாதிகளாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 53 பேர் பெயரிடப்பட்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி ...
Read More »மாவீரர் நாள் 2018 – மெல்பேர்ண்
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவுகூரும் தமிழீழ தேசிய மாவீரர்நாள் நிகழ்வுகள் 27 – 11 – 2018 செவ்வாய்க்கிழமை மெல்பேர்ண் ஸ்பிறிங்வேல் நகரமண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களான திரு பிரசாத் அவர்கள் தமிழிலும் செல்வி லக்சிகா அவர்கள் ஆங்கிலத்திலும் நிகழ்வை தலைமையேற்று தொகுத்து வழங்கினார்கள். மாலை 6.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் முதன்மைச்சுடரை மாவீரர் 2ம் லெப்ரினன்ட் அருமைநாயகியின் சகோதரன் திரு ஜேசுதாசன் செல்வராஜா அவர்கள் ஏற்றிவைத்தார். அவுஸ்திரேலியக்கொடியை தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர் திரு முரளீதரன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழ தேசியக்கொடியை தமிழ் ...
Read More »மாவீரர் நாள் 2018 – சிட்னி
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு சிட்னியில் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த சஞ்சயன் அவர்களும், மாவீரர் லெப். கேணல் எழில்கண்ணன் அவர்களின் மகள் கதிரினி அவர்களும் நிகழ்வை தலைமையேற்று தொகுத்து வழங்கினார்கள். மாலை 6.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் முதன்மைச்சுடரை மாவீரர் கப்டன் வெண்மதி அவர்களின் சகோதரர் தர்சன் அவர்கள் ஏற்றிவைத்தார். அவுஸ்திரேலிய பழங்குடிகளின் தேசியகொடியை நாட்டுப்பற்றாளர் விஜயகுமாரின் துணைவி புவனேஸ்வரி ஏற்றிவைக்க, அவுஸ்திரேலியக்கொடியை தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர் குமரன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புகுழுவின் சிட்னி ...
Read More »மன்னிப்பு கேட்க முடியாது!- ஏ.ஆர். முருகதாஸ்
அரசின் நலத்திட்டங்களை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது என ஏ.ஆர். முருகதாஸ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்தில் முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என கூறப்பட்டது. தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இது அ.தி.மு.க.வினரை கோபம் அடைய செய்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சர்கார் திரைப்படத்தின் பேனர்களையும், ...
Read More »உணவின் விலையோ மலிவு; தரமோ அருமை! – சொந்த தொகுதியில் கலக்கும் எம்.எல்.ஏ ரோஜா
நடிகையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா, தன் நகரி தொகுதியில் மலிவு விலை உணவகம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து உற்சாகமாகப் பேசுகிறார் ரோஜா. “சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஜெயலலிதா எனக்கு இன்ஸ்பிரேஷன். அவங்க முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் ‘அம்மா உணவகம்’ என்ற திட்டத்தைத் தொடங்கியிருந்தாங்க. அதனால், நிறைய ஏழை மக்கள் பயனடைஞ்சாங்க. அத்திட்டத்தின் பலனை நானே தமிழ்நாட்டில் பலமுறை பார்த்தேன். அதுபோன்ற மலிவு விலை உணவகத்தை என் தொகுதியில் ஆரம்பிக்கணும்னு ஆசைப்பட்டேன். நெசவாளர்கள், கட்டடப் பணியாளர்கள்னு என் தொகுதியில் தினக்கூலி ஏழை மக்கள் அதிகம் ...
Read More »அவுஸ்திரேலிய காவல் துறைக்கு உதவியாக இராணுவத்தினர்!
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அவசரகால தருணத்தில் மாநில அரசுகள் காவல் துறைக்கு மேலதிகமாக இராணுவத்தினரின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தத்திற்கு அமைவாக மாநில காவல் துறை படைக்கு உதவியாக மேலதிகமாக இராணுவத்தின் உதவி தேவை என்று மாநில அரசு கருதுமானால் பாதுகாப்பு அமைச்சு அதனை சாதகமாக பரிசீலிக்கலாம். அதற்கேற்றவாறு இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் தொடர்பாக Greens கட்சி கருத்து தெரிவிக்கும்போது, ‘எதேச்சாதிகாரத்தை நோக்கி அவுஸ்திரேலியா செல்வதை எடுத்துக்காட்டும் சட்டம்தான் இது’ என்று கண்டித்துள்ளது. இதேவேளை தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தின் அடிப்படையில் ...
Read More »சிட்னியில் வரலாறு காணாத கனமழை – ஒருவர் பலி
அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் இன்று காலை முதல் வரலாறு காணாத மழை பெய்து வருவதாகவும் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை இன்று ஒரே நாளில் பெய்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பல்வேறு இடங்களில் மரங்கள் வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்ததால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் வெளியில் சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் சிரமத்துக்குள்ளாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிட்னி நகரில் உள்ள சுரங்க புகையிரதங்கள் மற்றும் புகையிரதங்கள், மற்றும் , ...
Read More »அவுஸ்திரேலியாவில் குடியேற அறிமுகமாகும் புதிய விசா!
தெற்கு அவுஸ்திரேலிய மாநில அரசு புதிய பிரிவு விசா ஒன்றை பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்தவாரம் முதல் இந்த விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு அவுஸ்திரேலியாவில் முதலீடு செய்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பும் புதிய entrepreneurs – தொழில்முனைவோரை வரவழைக்கும் நோக்கில் இப்புதிய விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள entrepreneurial and Business & Innovation விசாவிலிருந்து இது மாறுபட்டது என தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய விசாமுறையின் கீழ் – தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிய தொழில்துறையை ஆரம்பிக்கும் திட்டத்தை மாநில அரசாங்கத்தின் ...
Read More »