முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை(3D) பயன்படுத்தி வசிப்பிடங்கள்,மற்றும் ஏனைய கட்டடங்களை அமைக்க முடியும் என சீன தொழில்நுட்பவியலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த தொழில்நுட்ப முறையினை அவர்கள் பயன்படுத்து முன்னரே அமெரிக்காவில் இது தொடர்பான அச்சிடல் தொழில்நுட்பத்தை அமெரிக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் 2012 ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தனர் இருப்பினும் சீனா தற்பொழுது இந்த தொழில்நுட்பம் மூலம் மாதிரி கட்டட அமைப்புக்களை வடிவமைத்துள்ளதன் மூலம் எதிர்காலத்தில் இதனை முன்னுதாரணமாக கொண்டு ஏனைய நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு முன்வரலாம். வழமையாக பயன்படுத்தப்படும் கொங்கிரீற் கலவையே பிரதானமாகப் பயன்படுத்தப்படுகின்றது இத் தொழில்நுட்பம்மூலம் ...
Read More »emurasu
போர்க்களத்தில் ஒரு பூ – இசைவெளியீடு
போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படத்தின் இசையானது, தமிழீழ விடுதலைப் போரில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. என அதன் இயக்குனர் தெரிவித்தார். பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பிரியா இசைப்பிரியாவின் கதாப்பாத்திரமேற்று நடிக்கிறார். மற்றும் பிரபாகரன், சுமந்தன், சுபாஷ்சந்திரபோஸ், ராதா, ரேகா, ஸ்ரீலஷ்மி ஆகியோரும் நடிக்கிறார்கள். உலக தமிழினத்தின் நெஞ்சத்தில் அழியாத நினைவுகளாய், ஆறாத் துயராய், மாறா ரணமாய் நிறைந்து நிற்கும் நாளில், தன் மொழியை, தமிழ்மொழியை, தமிழினத்தை, தாய்த்திருநாட்டை மிகவும் நேசி்த்த காரணத்தால் ...
Read More »பண்ணையாரும் பத்மினியும்
அண்மையில் வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்த திரைப்படங்களுள் ஒன்றாக பண்ணையாரும் பத்மினியும் விளங்குகின்றது. புறக்கணிக்க முடியாத படங்களுள் ஒன்றாக மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறுவதற்கு அப்படத்துக்கான விளம்பரமும் ‘விஜய் சேதுபதி’ என்ற நடிகனின் பெயரும் முக்கிய காரணம். இப்போதெல்லாம் விஜய் சேதுபதியின் படங்களென்றால் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களாக பெரும்பாலான மக்கள் மத்தியில் பதிந்துவிட்டன. தனியே வெகுசனங்களின் இரசனையை மட்டுமன்றி தீவிரமான சினிமா நுகர்வோரையும் கவர்ந்திழுக்கும் படங்களாகவே விஜய் சேதுபதியின் படங்கள் அமைந்துவிடுகின்றன. தென்மேற்குப் பருவக்காற்று, நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும் என்று ...
Read More »RUSH திரைப்பட விமா்சனம்
Formula One எனப்படும் கார் ஓட்டப் பந்தய இரசிகர்களுக்கு கடந்த ஆண்டு சோகமானதகவே நிறைவுபெற்றது. ஆம். கார் ஓட்டப்பந்தயத்தில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கல் சூமேக்கர் (Michael Schumacher) தலையில் பலத்த அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். பலவிதமான கார் ஓட்டப்பந்தயங்கள் உலகில் நடக்கின்றபோதும் அதிக விறுவிறுப்பானதும் அதிகளவு மக்களால் இரசிக்கப்படுவதாகவும் அதிகளவு ஆபத்தானதாகவுள்ள விளையாட்டுத்தான் இந்த Formula One. இந்த வேகப்பந்தயத்தில் 1994 முதல் 2004 வரையான பத்தாண்டுகளில் ஏழு முறைகள் வெற்றிவாகை சூடி தன்னிகரில்லாதவராகத் தன்னை நிலைநிறுத்திய பின்னர் 2006இல் பந்தயத்திலிருந்து ஓய்வு பெற்றார். ...
Read More »பேய்(க்) காட்டும் வில்லா
திரைப்படங்களைப் பொதுவாக அதன் கதைக்களத்தினையும் காட்சியமைப்பையும் வைத்து வகைபிரித்து வைப்பார்கள். காதல், நகைச்சுவை, திகில் போன்ற வகைகளில் திரைப்படங்களைக் குறிப்பிடுவார்கள்.பொதுவாகவே உலகத்திரைப்படங்கள் தனியொரு வகையினதாகவோ அல்லது ஓரிரு வகைகள் பொருந்தக் கூடியதாகவோ அமைகின்றன. தமிழ்த் திரையுலகில் இவ்வாறு ஒவ்வொரு படத்தையும் வகைபிரித்துச் சொல்வது மிகமிகக் கடினம் எனுமளவுக்குத்தான் படங்கள் உள்ளன. பெரும்பாலான படங்கள் ஒரேமாதிரியான அடைப்பலகைக்குள் அடங்குமாற்போன்றே உள்ளன. காதல், நகைச்சுவை, நாலு சண்டை, நாலு பாட்டு என்ற சமன்பாட்டின்படியே பெருமளவு படங்கள் வந்துவிடும். ஒரு திரைப்படம் வெற்றிபெற்றால் அந்தக் கதைக்களனை ஒட்டியே பத்துப் ...
Read More »விண்டோஸ் 7 + விண்டோஸ் 8 = விண்டோஸ் 10
எதிர்பார்க்கப்பட்டது போன்று விண்டோஸ் தனது புதிய கணனி இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விண்டோஸ் 7 இன் சிறப்புகளையும் விண்டோஸ் 8 இன் சிறப்புகளையும் உள்ளடக்கி இப்புதிய இயங்குதளம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிய கைபேசிகள் முதல் மடிக்கணனி மற்றும் மேசைக்கணனி வரை இலகுவாக பயன்படுத்தக்கூடியவாறு இப்புதிய இயங்குதளம் வருகின்றது. கடந்த செவ்வாய்கிழமை மைக்ரோசொப்ற் புதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியமை மூலம் விண்டோஸ் 8 ஆனது விஸ்ரா வைப்போல அனைவரையும் கவரவில்லை எனவும் பெரும்பாலானவர்கள் விண்டோஸ் 7 விரும்புவதாகவும் தரவுகள் காட்டுகின்றன. அது சரி. விண்டோஸ் 9 என்று ...
Read More »உங்கள் கணனியை பாதுகாக்க சிறு தகவல்கள்
1. தெரியாதவர்கள் அனுப்பும் மின்னஞ்சல்களை அல்லது சந்தேகத்துக்கு இடமான மின்னஞ்சல்களை திறக்காதீர்கள்.குறிப்பாக மின்னஞ்சல்களில் இணைக்கப்பட்டுள்ள கோப்புகளை திறப்பதில் அவதானம் தேவை. 2. உங்கள் நண்பர் அனுப்புவது போன்றே உங்களுக்கு மின்னஞ்சல்கள் வரும் என்பது தெரியுமா? அவதானம் தேவை. 3. புதிய தளங்களுக்கு செல்லும்போது நம்பகமான தளங்கள் என்பதை உறுதிசெய்யுங்கள். இணையதளங்கள் ஊடாகவே அனேக கணனிகள் பழுதாகின்றன. 4.அதிகமான விளம்பரங்கள் உள்ள தளங்களுக்கு செல்லாதீர்கள். அங்கு பல்வேறுஇணையதளங்களிலிருந்து இணைப்பு செய்யப்பட்டுள்ளதால் உண்மையில் நீங்கள் 50 இற்கு மேற்பட்ட தளங்களுடன் உங்கள் தொடர்பு வருகின்றது.இதனால் ...
Read More »இனப்படுகொலை: கூட்டமைப்பின் தயக்கம் – சிவில் சமூகம்
தார்மீக ரீதியிலோ, சட்ட ரீதியிலோ எந்தத் தடைகளும் இல்லை என நாம் கருதுகிறோம்” இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளது தமிழ் சிவில் சமூக அமைப்பு. தமிழர்கள் மீது கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் மேற்கொள்ளப்படுவது இனப்படுகொலையே என்பதை வெளிப்படுத்தவும் இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையைக் கோரவும் வட மாகாண சபைக்குத் தடை ஒன்றும் இல்லை என அந்த அமைப்பு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழர்கள் மீது நடத்தப்பட்டதும் நடத்தப்படுவதும் இன அழிப்பே என வட மாகாண சபையில், உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொண்டுவந்த பிரேரணையை பல்வேறு வியாக்கியானங்களைக் கூறி ...
Read More »இன்ரநெற் கமராக்கள் கண்காணிக்கப்படுகின்றன!!
உங்கள் வீட்டில் உள்ள இன்ரநெற் கமராக்கள் மூலம் என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதை உலகத்தின் எந்த மூலையிலிருந்து யாராலும் பார்த்துக்கொள்ளமுடியும் என்பதை அறிந்திருக்கிறீர்களா? ஆம் அவுஸ்திரேலியாவில் உள்ள நுாற்றுக்கணக்கான வீடுகள் வணிகநிலையங்கள் பயன்படுத்துகின்ற பல இன்ரநெற் கமராக்களின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மொஸ்கோவை தளமாக கொண்டியங்கும் Insecam.com என்ற இணையதளம் உலகெங்கும் உள்ள 73000 இன்ரநெற் கமராக்களை இவ்வாறு பார்க்ககூடியதாக உள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது. இன்ரநெற் கமராக்கள் ஆரம்பத்தில் ஓரே பாஸ்வேட்டுடன் தயார்படுத்தப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்தமுன்னர் அதற்கான பாஸ்வேட்டை மாற்றவேண்டும். அல்லாவிட்டால் அதன் அடிப்படையான ...
Read More »அம்பாறை தனிமாவட்ட கோரிக்கை – இருபக்க கருத்துகள்
முஸ்லிம் காங்கிரஸ் வேண்டி நிற்கும் அம்பாறை மாவட்டத் தமிழ்பேசும் மக்களுக்கான கரையோர மாவட்டக் கோரிக்கை தொடர்பாக அம்பாறை மாவட்ட தமிழர் மகாசபை இணைப்பாளரின் கட்டுரையையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கருத்தினையும் வீரகேசரி பத்திரிகையிலிருந்து மீள்பதிவிடுகின்றோம். தமிழ்மக்களின் கருத்து தற்போதுள்ள அம்பாறை நிர்வாக மாவட்டத்தில் அம்பாறைத் தேர்தல் தொகுதி நீங்கலாக மீதியான பொத்துவில், கல்முனை, சம்மாந்துறைத் தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிப் புதிதாகக் ‘கல்முனை மாவட்டம்’ என்ற முஸ்லிம் பெரும்பான்மைக் கரையோர மாவட்டம் ஒன்றினை உருவாக்கும் முயற்சி அதன் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் காலத்திலேயே ஸ்ரீலங்கா ...
Read More »