முப்பரிமாண அச்சிடும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வீடுகள்

3Dprinter1முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை(3D) பயன்படுத்தி வசிப்பிடங்கள்,மற்றும் ஏனைய கட்டடங்களை அமைக்க முடியும் என சீன தொழில்நுட்பவியலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த தொழில்நுட்ப முறையினை அவர்கள் பயன்படுத்து முன்னரே அமெரிக்காவில் இது தொடர்பான அச்சிடல் தொழில்நுட்பத்தை அமெரிக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் 2012 ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தனர் இருப்பினும் சீனா தற்பொழுது இந்த தொழில்நுட்பம் மூலம் மாதிரி கட்டட அமைப்புக்களை வடிவமைத்துள்ளதன் மூலம் எதிர்காலத்தில் இதனை முன்னுதாரணமாக கொண்டு ஏனைய நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு முன்வரலாம்.

வழமையாக பயன்படுத்தப்படும் கொங்கிரீற் கலவையே பிரதானமாகப் பயன்படுத்தப்படுகின்றது இத் தொழில்நுட்பம்மூலம் முதலில் 10 வீடுகளை 24 மணி நேரத்தில் அமைத்து சாதனை படைத்திருக்கின்றார்கள். ஒரு வீட்டினை அமைப்பதற்கான அண்ணளவான பெறுமதி 4800 அமெரிக்க டொலர்களாகும். இதில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை மீள்பாவனைக்கு(Recycle)பயன்படுத்தமுடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் வேலைநாட்கள், கூலியாட்கள், மூலதனம் என்பவற்றை கருதும்போது அண்ணளவாக சாதாரண செலவைவிட 50வீதமளவில் மிச்சப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்கள். இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக அடுக்குமாடி கட்டட அமைப்புக்களையும் கட்டுவதற்கு முழுமையான சாத்தியமிருப்பதாக நம்பப்படுகின்றது. இதில் சுவர் அமைப்பில் பயன்படுத்தப்படும் கற்கள் இடைவெளிக்கற்களாக அமைக்கப்படுவதால் காலநிலைகளுக்கு மிகவும் ஏற்றதாகவிருக்கும், வெளியே கடும் வெப்பமோ குளிரோ ஏற்படுமிடத்து அதனை அறைகளுக்கு செல்லாது தடுப்பதில் இக்கற்கள் பெரும் பங்களிப்பை வழங்கும்.

இதுதான் அவர்கள் வடிவமைத்த வீடுகள்

 

இந்த தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் வீடுகளை நகர்த்தி செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதைப்பற்றிய விளக்கங்களை அவர்கள் வழங்காதபோதும் அதற்கான சாத்தியங்கள் நிறையவே இருப்பதாகவே நம்பப்படுகின்றது. இதனை ஏற்கனவே சில நாடுகளில் கட்டட அமைப்புக்கள் நகர்த்தப்படுவதுண்டு.(காணொளி இறுதியில்)இனிவரும் காலத்தில் வேலையாட்களுக்காக ஏங்கியிருக்கவேண்டிய தேவையோ தரம் தொடர்பான மேற்பார்வைகூட கணனியே காண்காணிக்க இருப்பதால் கட்டடம் அமைக்கப்பட்ட பின் கணனியிலுள்ள பதிவை பிரதி செய்தால் போதுமானது அவை என்ன கலவையிலான மூலப்பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்டது என்பதை அறிய முடியும்.

இனி என்ன இருக்கிறது நீங்கள் வீட்டிலிருந்து ஒன்லைன்மூலம் உங்களுக்கு வேண்டிய வடிவமைப்பை தெரிவு செய்து அதற்குரிய பணத்தை செலுத்தினால் அவர்கள் ஒரே நாளில் வந்து வீடு கட்டி தந்துவிட்டு போகப்போகின்றார்கள் அல்லது உங்கள் வீட்டுக்கே நீங்கள் விரும்பிய வீடு வந்துவிடப்போகின்றது.

அமெரிக்கா வல்லுனரால் 2012 இல் காண்பிக்கப்பட்ட விளக்க காணொளி

 

”நாசா” ஆனது முப்பரிமான அச்சிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்திரனில் வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக இவ்வாண்டு ஆரம்பத்தில் நாசா அறிவித்தது. மேலும் சந்திரனில் விண்வெளி வீரர்கள் வாழ்வதற்கான கட்டமைப்பை நிர்மாணிப்பதே நாசாவின் முக்கிய இலக்காக உள்ளது.

முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களை கணிணி மூலம் இயக்கப்படும் ரோபோ இயந்திரங்களை பயன்படுத்தி சந்திரனின் மேற்பரப்பில் 24 மணி நேரத்தில் வீடுகளை நிர்மாணிக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இந்நிலையில் மேற்படி முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை விருத்தி செய்வதற்கு அமெரிக்கா தென் கலிபோனியா பல்கலைக்கழகத்திற்கு நாசா தற்போது நிதியுதவி அளித்துள்ளது.

அமைப்புக் கைவினைத்திறன் என அழைக்கப்படும் இந்த செயற்கிரமம் சந்திரனின் மேற்பரப்பில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வடிவமைப்பில் கொங்கிறீட் அல்லது ஏனைய மூலப் பொருட்களை பயன்படுத்தி வீடுகளை அமைப்பதே நோக்காகக் கொண்டது. இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான சில பாகங்கள் பூமியில் உருவாக்கப்பட்டு ஏவுகணையொன்றின் மூலம் சந்திரனுக்கு கொண்டு செல்லப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான 90 சதவீத மூலப்பொருட்கள் ஏற்கனவே சந்திரனில் உள்ளதாக கூறப்படுகின்றது. மேற்படி புதிய வீடமைப்பு முறைமையைப் பயன்படுத்தி அனர்த்த வலயங்களிலும் சேரிப்பகுதிகளிலும் இலகுவாக வீடுகளை நிர்மாணிக்க முடியும் என தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பெஹ்ரோன் கொஷ்ருனவிஸ் தெரிவித்தார்.

நகர்த்தப்படும் வீடுகள்

Leave a Reply