எதிர்பார்க்கப்பட்டது போன்று விண்டோஸ் தனது புதிய கணனி இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விண்டோஸ் 7 இன் சிறப்புகளையும் விண்டோஸ் 8 இன் சிறப்புகளையும் உள்ளடக்கி இப்புதிய இயங்குதளம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய கைபேசிகள் முதல் மடிக்கணனி மற்றும் மேசைக்கணனி வரை இலகுவாக பயன்படுத்தக்கூடியவாறு இப்புதிய இயங்குதளம் வருகின்றது. கடந்த செவ்வாய்கிழமை மைக்ரோசொப்ற் புதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியமை மூலம் விண்டோஸ் 8 ஆனது விஸ்ரா வைப்போல அனைவரையும் கவரவில்லை எனவும் பெரும்பாலானவர்கள் விண்டோஸ் 7 விரும்புவதாகவும் தரவுகள் காட்டுகின்றன.
அது சரி. விண்டோஸ் 9 என்று இல்லாமல் ஏன் விண்டோஸ் 10? இதற்கு மைக்கிரோசொப்ற் நேரடியாக பதிலளிக்காமல் விண்டோஸ் 10 என்பது பொருத்தமான பெயராக உள்ளது என தெரிவித்துள்ளது. இது மைக்கிரோசொப்ற் பின்பற்றிவரும் வழமையான நடைமுறைதான் என்றாலும் ஆரம்பத்தில் எழுதப்பட்ட கோடிங் (coding) தான் பிரச்சனை என்கிறார்கள் இன்னும் சிலர்.
அந்தக்கோடிங் பின்வருமாறு உள்ளதாம்.
Microsoft dev here, the internal rumours are that early testing revealed just how many third party products that had code of the form
if(version.StartsWith("Windows 9")) { /* 95 and 98 */ } else { and that this was the pragmatic solution to avoid that.
அதாவது விண்டோஸ் 95 மற்றும் விண்டோஸ் 98 போன்ற பழைய இயங்குதளங்களுடன் வேலை செய்யக்கூடியவாறு எழுதப்பட்ட வேறு அப்பிளேகேசன்களுக்கான செயல்நிரலிகளே (coding) சோம்பேறித்தனத்தால் அவ்வாறு எழுதப்பட்டுவிட்டதாகவும். அதனால் விண்டோஸ் 9 என பெயரிட்டால் அந்தப்பழைய இயங்குதளங்களின் வரிசைக்குள் சென்றுவிடும் அபாயம் உள்ளது என்கிறார்கள். அது உண்மையாகவிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லைத்தான்.
எது எப்படியோ புதிய இயங்குதளம் விரைவில் வரவிருக்கிறது. புதிய நல்ல செயற்பாட்டு செயலிகள் வரும். ஆனால் விலை? பொறுத்துத்தான் பார்ப்போமே.