இன்ரநெற் கமராக்கள் கண்காணிக்கப்படுகின்றன!!

உங்கள் வீட்டில் உள்ள இன்ரநெற் கமராக்கள் மூலம் என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதை உலகத்தின் எந்த மூலையிலிருந்து யாராலும் பார்த்துக்கொள்ளமுடியும் என்பதை அறிந்திருக்கிறீர்களா? ஆம் அவுஸ்திரேலியாவில் உள்ள நுாற்றுக்கணக்கான வீடுகள் வணிகநிலையங்கள் பயன்படுத்துகின்ற பல இன்ரநெற் கமராக்களின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மொஸ்கோவை தளமாக கொண்டியங்கும் Insecam.com என்ற இணையதளம் உலகெங்கும் உள்ள 73000 இன்ரநெற் கமராக்களை இவ்வாறு பார்க்ககூடியதாக உள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது.

இன்ரநெற் கமராக்கள் ஆரம்பத்தில் ஓரே பாஸ்வேட்டுடன் தயார்படுத்தப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்தமுன்னர் அதற்கான பாஸ்வேட்டை மாற்றவேண்டும். அல்லாவிட்டால் அதன் அடிப்படையான பாஸ்வேட்டுக்களை ஒருவர் இலகுவாகவே கண்டறிந்துவிடமுடியும்.  எனவே உங்கள் பாஸ்வேட்டுக்களை இன்னொருவர் இலகுவாக அறிந்திருக்காத வகையில் மாற்ற்பபட்டு இருக்கிறதா என்பதை கவனித்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான வழி என்கிறார்கள் குறித்த இணையதளத்தினர்.

இச்செய்தி பற்றிய மேலதிக செய்திகள் இங்கே

http://www.smh.com.au/digital-life/consumer-security/fly-on-the-wall-security-footage-from-australia-shows-inside-lounge-rooms-bedrooms-and-shops-20141108-11j2k5.html

Leave a Reply