Tag Archives: ஆசிரியர்தெரிவு

வெளிநாட்டவர்களுக்கென புதிய ஆஸ்திரேலிய விசா அறிமுகமாகிறது!

தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பத்து நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் புதிய விவசாய விசாவின்கீழ் ஆஸ்திரேலியா வந்து இங்குள்ள விவசாயிகளிடம் பணிபுரிய முடியும். முன்னதாக பிரிட்டன் நாட்டவர்களை மையப்படுத்தி அறிவிக்கப்பட்ட இப்புதிய விவசாய விசாவில் தற்போது இந்தோனேசியா, மியன்மார், வியட்நாம், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, Brunei மற்றும் Laos ஆகிய 10 நாடுகள் இணைத்துக்கொள்ளப்படுகின்றன. இப்புதிய விசாவை இவ்வருட இறுதிக்குள் நடைமுறைக்கு கொண்டுவர அரசு எதிர்பார்த்துள்ளது. பிரிட்டனிலிருந்து working holiday விசாவில் வருபவர்கள்(backpackers) தமது விசாவை நீட்டிக்க வேண்டுமெனில் ஆஸ்திரேலியாவிலுள்ள விவசாய நிலங்களில் வேலைசெய்யவேண்டுமென்ற நிபந்தனை விலக்கிக்கொள்ளப்படவுள்ளதை அடுத்து ...

Read More »

கடும் உணவு பஞ்சம்- 2 நாளைக்கு ஒரு தடவை சாப்பிடும் வடகொரிய மக்கள்

வடகொரியா மக்கள் அரிசி, மக்காசோளம் போன்றவற்றை அதிகமாக சாப்பிடுபவர்கள். அதில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.இரும்புத்திரை நாடாக உள்ள வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதே வெளி உலகத்துக்கு தெரியாது. ஆனால் தற்போது பல லட்சம் மக்கள் பட்டினி கிடக்கும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவியதால் வடகொரியாவுக்கு நோய் தொற்று வந்து விடக்கூடாது என்பதற்காக அதிபர் கிங்ஜாங்உன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். வடகொரியாவுக்கு சீனாவில் இருந்துதான் பல்வேறு உதவிப்பொருட்கள் வந்து கொண்டு இருந்தன. அவற்றுக்கும் தடை விதித்தார். இதன் காரணமாக பொருட்கள் ...

Read More »

உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், 30 நாடாளுன்ற உறுப்பினர்கள் இதுவரையில் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22ஆம் திகதி இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு ...

Read More »

மக்கள் மத்தியில் அலட்சியம் புதிய டெல்டா வைரஸ் பரவக்காரணம்!

நடமாட்ட கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொவிட் பரவலின் தீவிரம் தொடர்பில் மக்கள் மத்தியில் அக்கறையின்மையே புதிய டெல்டா வைரஸ் தொற்று பரவ முக்கிய காரணம் என கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார். தெமட்டகொடை – ஆராமய பகுதியில் டெல்டா வைரஸ் திரிபு, ஐவருக்கு உறுதியானமை தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்தியாவில் மிகவேகமாக பரவிவரும் வீரியம் கொண்ட பி.1.617.2 என்ற டெல்டா வைரஸ் திரிபு தொற்றுறுதியான நபர்கள் முதல் ...

Read More »

ஷானி அபேசேகரவின் பாதுகாப்புத் தொடர்பில் லசந்தவின் மகள் அச்சம்

காவல் துறையால் நிரூபிக்கமுடியாத குற்றத்திற்கான சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிரேஷ்ட  காவல் துறை அத்தியட்சர் ஷானி அபேசேகரவும் உதவி காவல் துறை  பரிசோதகர் மென்டிஸும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்தாலும் அவர்களது பாதுகாப்புத்தொடர்பான அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார். “சிறிசேனவும் ரணிலும் எனது தந்தை படுகொலைசெய்யப்பட்டமை குறித்த விசாரணைகளை குழப்பினார்கள் – லசந்தவின் மகள் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அகிம்சா விக்கிரமதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: ...

Read More »

பேராசிரியர் மோகான் முனசிங்கவுக்கு விருது

இலங்கை இயற்பியலாளரும், பொருளாதார நிபுணருமான பேராசிரியர் மோகான் முனசிங்க இந்த ஆண்டின் ;ப்ளூ பிளானட் ; விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். சுற்றுச்சூழலுக்கான நோபல் விருதுக்கு சமமான மிக உயர்ந்த சர்வதேச விருதான ப்ளூ பிளானட் விருது இவ்வாண்டு 30 ஆவது முறையாக வழங்கப்படுகிறது. உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியதற்காக பணிப்பாளர்கள் குழு 2021 ஆம் ஆண்டிற்கான இரண்டு விருது பெற்றவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. அவ்விருவரும் இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் மோகன் முனசிங்க மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் வி. ராமநாதன் ஆவர். மோகன் ...

Read More »

இலவசமாக சட்ட உதவிகளை வழங்க ஐ.தே.க.வினால் இரண்டு சட்டத்தரணிகள் நியமிப்பு

சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிட்ட காரணத்தால் யாராவது காவல் துறையால்  கைது செய்யப்பட்டு சட்டத்துக்கு முன்னால் நிறுத்தப்பட்டால் அவர்களுக்கு இலவசமாக சட்ட உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அதற்காக இரண்டு சட்டத்தரணிகளையும் நியமித்திருக்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். அரசாங்கத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பவர்களை அரசாங்கம் காவல் துறையைக்கொண்டு கைது செய்துவரும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் மக்களை பயமுறுத்தும் ...

Read More »

ராஜபக்ஷவினருடன் அரசியல் ‘டீலே’ ரணிலின் நாடாளுமன்ற வருகை

ராஜபக்ஷவினருடன் செய்துகொண்டுள்ள அரசியல் ‘டீல் ‘ காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வருகின்றார். அவர் எதிர்க்கட்சியின் பக்கம் அமர்ந்தாலும் அரசாங்கத்தை பலப்படுத்தும் பணியையே முன்னெடுப்பார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார். ரணில் – ராஜபக் ஷ அரசியல் டீல் குறித்து எமக்கு புதிதாக ஒன்றும் கூறத்தேவையில்லை எனவும் அவர் கூறுகின்றார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்த தனது கருத்தை தெரிவிக்கும் போதே ...

Read More »

மருத்துவ சேவைக்காக ஆஸ்திரேலிய அரசின் விருது பெறும் தமிழர்!

மருத்துவம் மற்றும் பல்கலாச்சார அமைப்புகளுக்கு ஆற்றிய சேவைகளுக்காக ஆஸ்திரேலிய அரசு வழங்கும் Order of Australia Honours விருதினை வைத்தியர்  செல்வேந்திரா செல்வநாயகம் பெற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் பிறந்து மலேசியாவில் கல்வி கற்று 1974 ஆண்டு அவுஸ்ரேலியாவில் வந்தடைந்தார். 60 ஆண்டுகளாக அவுஸ்ரேலியாவில் வைத்தியராக உள்ளார்.

Read More »

ஏமனில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 25 பேர் பலி – 175 பேரின் கதி என்ன?

சட்டவிரோதமாக மற்றும் அபாயகரமான முறையில் மேற்கொள்ளப்படும் இந்த கடல் பயணங்கள் பல நேரங்களில் விபத்தில் முடிந்து விடுகிறது. உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அந்த வகையில் எத்தியோப்பியா மற்றும் சோமாலியா நாடுகளைச் சேர்ந்த மக்கள் கடல் வழியாக படகுகளில் சட்டவிரோதமாக பயணம் செய்து சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இவர்கள் ஏமன் நாட்டின் பாப் அல் மண்டாப் ஜலசந்தி வழியாக பயணித்து சவுதி அரேபியா செல்ல வேண்டியுள்ளது. ...

Read More »