Tag Archives: ஆசிரியர்தெரிவு

இலஞ்சம் வாங்கி அவுஸ்திரேலிய விசா கொடுத்த அதிகாரிகள்!

தென்னாபிரிக்காவிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலிய விசாவைப் பெற்றுக் கொள்வதற்காக நைஜீரிய நாட்டினர் இலஞ்சம் கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனை அடுத்து இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை 21 நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அவுஸ்திரேலிய மாணவர் விசாக்களை முறைகேடாகப் பெற்றுள்ளனர் என The Herald Sun செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற விசாரணையின் அடிப்படையில் தூதரக அதிகாரிகள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள அவுஸ்திரேலிய ...

Read More »

ட்விட்டர் வழங்கும் அற்புத அம்சங்கள்!

ட்விட்டர் சமூக வலைத்தளத்தின் சமீபத்திய அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு புதிய அம்சங்களை வழங்கியுள்ளது. புதிய அப்டேட் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். உலகின் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இருக்கும் ட்விட்டரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் படி ட்விட்டர் விண்டோஸ், லைட் ஆப் மற்றும் மொபைல் வலைத்தளங்களில் நைட் மோட், ரிட்வீட், லைக் எண்ணிக்கை, ரிப்ளை சார்ந்த அப்டேட் உள்ளிட்ட அம்சங்களை வழங்குகிறது. பல்வேறு தளங்களிலும் சீரான சேவையை வழங்கும் நோக்கில் இந்த அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ...

Read More »

உங்களுடன் பேச நாங்கள் ஒன்றும் கெஞ்சவில்லை! – வடகொரியா

லிபியாவை போல வடகொரியாவின் முடிவு இருக்கும் என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் குறிப்பிட்டிருந்த நிலையில், அவரை முட்டாள் என வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. இரு துருவங்களாக இருக்கும் வடகொரியா – அமெரிக்கா இடையே உள்ள பகை குறைந்த நிலையில், டிரம்ப் – கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தனர். வடகொரியா கைவசம் உள்ள அனைத்து அணு ஆயுதங்களையும் அழிக்க வேண்டும் என அமெரிக்க நிபந்தனை விதித்தது. இதனை அடுத்து, நிபந்தனைகளை ...

Read More »

இருந்துகொண்டு யாரும் எழுதலாம்! இறங்கிப் பாருங்கள்அருமை புரியும்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் பற்றி பலரும் பலவாறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்றுடன் விமர்சனங்களை விட்டுவிடுங்கள். சேறுபூசல்களை தவிர்த்திடுங்கள். முள்ளிவாய்க்கால் எனும் சொல்லை கேவலப்படுத்தாதீர்கள். இருந்துகொண்டு யாரும் எழுதலாம், இறங்கிப் பாருங்கள்அருமை புரியும். “முள்ளிவாய்க்கால்” ஈடுகொடுக்கமுடியாத இழப்புக்களையும், சொல்லொணாத் துயரங்களையும், ஆறாத வலிகளையும் எஞ்சிய எம்மவர்களிடம் விட்டுச் சென்றிருக்கின்றது. இந்நிகழ்வினை விமர்சித்து இழிவுபடுத்தாதீர்கள். சரியாயின் தட்டிக்கொடுங்கள், தவறென்றால் அதற்கான முறையில் எடுத்துக்கூறி சரிசெய்ய வழிவகை செய்யுங்கள். கடந்தகால நினைவேந்தல்களைப்போல அல்லாது, அனைவரையும் ஒன்றினைத்து இம்முறை ஒரே இடத்தில் நினைவேந்தலை நடாத்தியமை தமிழராகிய நாமனைவரும் பெருமைப்படவேண்டிய விடயம்! மாணவர்களுக்கும் ...

Read More »

மகிந்தவுடன் கைகோர்க்கும் 16 பேர்!

அரசாங்கத்தை விட்டு விலகிய 16 பேரும் கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு அண்மையில் அரசாங்கத்தை விட்டு விலகிய 16 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும், கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இந்த 16 பேரைக் கொண்ட குழுவினர் நேற்றைய தினம் சந்தித்திருந்தனர். எதிர்கால அரசியல் செயற்பாடுகளின் போது இணைந்து நடவடிக்கைகளை எடுப்பதற்கு இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி தயசேகர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கூட்டு எதிர்க்கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ...

Read More »

50 பேரைத் தேடுகிறது ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு காணாமற்போன 50 விளையாட்டாளர்களையும், அதிகாரிகளையும் தேடி வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். மேலும் 190 பேர் அடைக்கலம் நாடுவதாகவும் திரு. பீட்டர் டட்டன் கூறினார்.அவர்கள் பாதுகாப்பு விசாவிற்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும் 15 பேர் வேறுவிதமான விசாக்களுக்கு விண்ணப்பித்ததாக அவர் கூறினார். தலைநகர் கென்பேராவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் திரு. டட்டன் அதனைத் தெரிவித்தார். காணாமற்போன 50 பேரையும் கண்டுபிடித்து, அவர்களை ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றி, சொந்த நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் ...

Read More »

கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு வேலைக்கு ஆகாது – டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்த சந்திப்பு வேலைக்கு ஆகாது என டிரம்ப் கூறியுள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை தகர்க்க வேண்டும். கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது. அணு ஆயுத ...

Read More »

எங்கோ வாழும் முதலாளி முக்கியமா? இங்கு வாழும் நம் மக்கள் முக்கியமா?

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பேரணி நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நடிகர் சத்யராஜும் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டங்களை தெரிவித்து ...

Read More »

யாழில் இடியுடன் கூடிய மழை! நகுலேஸ்வரம் மீது விழுந்தது இடி!

யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் இருந்து சுமார் 2 மணித்தியாலங்கள் மின்னல்,இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. எனினும் ஆங்காங்கே மின்னல், இடித் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதேவேளை கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் கோபுரம் மீது இடி விழுந்தது எனக் கூறப்படுகிறது. இதன் போது கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. ஏனைய சேதவிவரங்கள் வெளியாகவில்லை.  

Read More »

முன்னாள் போராளி வீட்டில் ஆயுதமாம்!

அண்மைக்காலமாக பல இடங்களில் சிறிலங்கா  படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடிப் பல இடங்களில் அகழ்வுகளை மேற்கொள்கின்றனர். எனினும் அவ்வாறு எந்த ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன என்ற சந்தேகத்தில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்று தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி, தர்மபுரத்தில் உள்ள முன்னாள் போராளி ஒருவரின் வீட்டிலேயே படையினர் அகழ்வு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். சிறிலங்கா விமானப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, கிளிநொச்சி நீதிவான் மன்றில் அனுமதி பெற்று இந்தத் ...

Read More »