ட்விட்டர் சமூக வலைத்தளத்தின் சமீபத்திய அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு புதிய அம்சங்களை வழங்கியுள்ளது. புதிய அப்டேட் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
உலகின் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இருக்கும் ட்விட்டரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் படி ட்விட்டர் விண்டோஸ், லைட் ஆப் மற்றும் மொபைல் வலைத்தளங்களில் நைட் மோட், ரிட்வீட், லைக் எண்ணிக்கை, ரிப்ளை சார்ந்த அப்டேட் உள்ளிட்ட அம்சங்களை வழங்குகிறது.
பல்வேறு தளங்களிலும் சீரான சேவையை வழங்கும் நோக்கில் இந்த அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ட்வீட் கம்போஸ் பாக்ஸ் மிக எளிமையாக ட்வீட் மற்றும் டைம்லைன் ஆப்ஷன்களிடையே செல்ல வழி செய்கிறது.

ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் ஏற்கனவே கிடைக்கும் நிலையில் மற்ற தளங்களுக்கும் இந்த அம்சம் படிப்படியாக வழங்கப்படுகிறது. இந்த மோட் ட்விட்டர் தீம் நிறத்தை இருளிக்கி இரவு நேரங்களில் பயன்படுத்தும் போதும் கண்களுக்கு சோர்வு ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.
ட்விட்டர் மொபைல் தளத்தில் ரியல்-டைம் ட்வீட் ரிப்ளைக்கள், ரீட்வீட்கள், லைக் உள்ளிட்டவற்றை பார்க்க அடிக்கடி ரீலோடு செய்ய வேண்டிய நிலை உள்ளது. புதிய அப்டேட் மூலம் இந்த நிலை மாற்றப்பட்டு ரீலோடு செய்யாமலேயே ரியல்-டைம் அப்டேட்களை பார்க்க முடியும்.
ட்விட்டரில் தற்சமயம் சேர்க்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் ட்விட்டர் லைட், ட்விட்டர் விண்டோஸ் தளங்களிலும் வழங்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal