யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் இருந்து சுமார் 2 மணித்தியாலங்கள் மின்னல்,இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. எனினும் ஆங்காங்கே மின்னல், இடித் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் கோபுரம் மீது இடி விழுந்தது எனக் கூறப்படுகிறது. இதன் போது கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. ஏனைய சேதவிவரங்கள் வெளியாகவில்லை.
Eelamurasu Australia Online News Portal