மகிந்தவுடன் கைகோர்க்கும் 16 பேர்!

அரசாங்கத்தை விட்டு விலகிய 16 பேரும் கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு அண்மையில் அரசாங்கத்தை விட்டு விலகிய 16 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும், கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இந்த 16 பேரைக் கொண்ட குழுவினர் நேற்றைய தினம் சந்தித்திருந்தனர். எதிர்கால அரசியல் செயற்பாடுகளின் போது இணைந்து நடவடிக்கைகளை எடுப்பதற்கு இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி தயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கூட்டு எதிர்க்கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், எவ்வாறெனினும், பதினாறு பேரைக் கொண்ட தமது சுதந்திரக் கட்சி குழுவானது பாராளுமன்றின் உள்ளேயும் வெளியேயும் தனியான ஓர் அலகாகவே இயங்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக, எதிர்வரும் காலத்தில் கூட்டு எதிர்கட்சியுடன் ஒன்றிணைந்து செயற்பட , அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று (23.05.18) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர். இதன்போது, இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.