Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஒருவரின் மரணத்திற்கு பின்னரும் பிரியாத கார்!

பல ஆண்டுகளாக தான் பயன்படுத்திய காரை மரணத்திற்கு பின்னரும் தான் பிரியக்கூடாது என விருப்பப்பட்ட நபரின் ஆசையை அவரது குடும்பத்தினர் நிறைவேற்றி வைத்துள்ளனர். சீனாவின் ஹெபேய் மாகாணத்தை சேர்ந்தவர் குய். பல ஆண்டுகளாக தான் பயன்படுத்தி வந்த காரை தன்னுடைய உயிருக்கும் மேலாக நேசித்த இவர், மரணத்திற்கு பின்னரும் தன்னுடைய கார் பிரியவே கூடாது என தனது குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை குய் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். குய்-யின் விருப்பத்தின் படி, அவரது குடும்பத்தினர் சடலத்தை காரில் வைத்து பெரிய ...

Read More »

5வது நாளாகவும் தொடரும் அகழவுப் பணி!

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள லங்கா சத்தொச நிறுவன வளாகத்தில் மனித எச்சங்களை தேடி மேற்கொள்ளப்படும் அகழவுப் பணிகள் 5வது நாளாகவும் இடம்பெற்று வருகிறது. கடந்த திங்கட்கிழமை முதல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜாவின் முன்னிலையில் இந்த பணிகள் இன்றும் இடம்பெற்றது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான அகழ்வு பணிகள் மாலை 5 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இதுவரை மனித எலும்புகள், பற்கள்,தடையப்பொருட்களான பொலித்தீன் பக்கற்,போத்தல் மூடி உள்ளிட்ட சில தடையப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

Read More »

சிறிலங்காவிற்கு பெருமளவான முதலீடுகளை வழங்கியுள்ள சீனா!

சீனாவின் ‘கடன்வலை ராஜதந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் முதலீட்டு வேலைத்திட்டங்களை மையப்படுத்தி, அமெரிக்காவின் சட்டவாக்குனர்கள் சிறிலங்கா விஜயத்தை மேற்கொண்டிருப்பதாக அமெரிக்காவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா உட்கட்டுமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான பெருமளவான முதலீடுகளை சீனா வழங்கியுள்ளது. எனினும் இதன் மூலம் சிறிலங்காவின் தமது கடன்பொறியில் சிக்கவைக்கும் ராஜதந்திரத்தை சீனா கையாள்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சுமத்துகின்றது. இந்த நிலையில் சிறிலங்காவின்  களநிலவரங்களை ஆய்வு நோக்கில் அமெரிக்காவின் அதிகாரமிக்க சட்டவாக்குனர்கள் குழு ஒன்று சிறிலங்கா வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களை சந்தித்து ...

Read More »

ராஸி – விமர்சனம்

1970களில் நடக்கின்ற கதை. கல்லூரி இளம் மாணவி அலியா பட், கவலை என்பதையே அறியாத ஒரு சந்தோஷப் பறவை. திடீரென்று ஒருநாள் அவருடை 1970களில் நடக்கின்ற கதை. கல்லூரி இளம் மாணவி அலியா பட், கவலை என்பதையே அறியாத ஒரு சந்தோஷப் பறவை. திடீரென்று ஒருநாள் அவருடைய வாழ்க்கையே திசை மாறுகிறது. இந்தியப் புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் அவரது அப்பா ரஜித் கபூர், பாகிஸ்தானைச் சேர்ந்த ராணுவ வீரர் விக்கி கவுஷலுக்கு அலியாவை திருமணம் செய்து வைக்கிறார். விக்கியின் அப்பாவும், ரஜித் கபூரும் பிரிவினைக்கு ...

Read More »

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுவர்களுக்கு கத்தோலிக்க தேவாலயம் நட்டஈடு!

அவுஸ்திரேலியாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுவர்களுக்கு கத்தோலிக்க தேவாலயம் நட்டஈடு வழங்க உள்ளது. சிறுவர் பாலியல் துஸ்பிரயோகச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்கும் தேசிய பொறிமுறைமையில் கத்தோலிக்க தேவாலயங்களும் இணைந்து கொண்டுள்ள நிலையில் இவ்வாறு நட்டஈடு வழங்க உள்ளது. கத்தோலிக்க தேவாலயங்களில் இடம்பெற்ற சிறுவர் பாலியல் துஸ்பிரயோகச் சம்பவங்கள் குறித்து ஐந்து ஆண்டுகள் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. 1950ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் அவுஸ்திரேலியாவின் 7 வீதமான கத்தோலிக்க மதகுருமார் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  பாதிக்கபட்டோருக்கு ...

Read More »

சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பியவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

சவுதி அரேபியாவில் சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பதிவிட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அபுதாபி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அகமது மன்சூர். இவர் சமூக வலைத்தளத்தில் ஐக்கிய அரபு அமீரக அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்து தவறான மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான தகவல்களை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை அபுதாபி நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது மன்சூர் தனது தவறான பதிவுகளின் மூலம் ...

Read More »

எனது 47 வருடகால அரசியலில் கடந்த மூன்று வருடங்களில் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன்!

100 நாள் வேலைத்திட்டத்தை யார் தயாரித்தது என்று தெரியாது. எனினும் அது முட்டாள்தனமான செயலாகும் என அதனை தயாரித்தவர்களுக்கு நான் கூறவிரும்புகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை மன்ற கல்லூரியில் நேற்று நடைபெற்ற மாதுலுவாவே சோபித தேரரின் 76 ஆவது பிறந்த தின நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாதுலுவாவே சோபித தேரரின் 76 பிறந்த தின நினைவு தினத்திற்கு எனக்கு எந்தவொரு அழைப்பும் கிடைக்கவில்லை. எந்தவொரு தகவலும் எனக்கு வழங்கவில்லை. ...

Read More »

கடவுச்சீட்டு விதிமுறையில் அதிரடி மாற்றம் செய்யும் அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலிய கடவுச்சீட்டில் புதிய மாற்றம் அதிரடியாக எதிர்வரும் ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது என அவுஸ்திரேலிய கடவுச்சீட்டு அலுவலகம் அறிவித்துள்ளது. கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்காக எடுக்கும் புகைப்படத்தில் prescription glasses-மூக்குக் கண்ணாடி அணிந்திருக்க முடியாது என்பது கட்டாயமாக்கப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த சுமார் 2 லட்சம் பேரின் புகைப்படங்கள் தெளிவற்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதான காரணமாக மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தது என கூறப்பட்டுள்ளது. ஆகவே கடவுச்சீட்டு விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலிக்க முடியாத நிலைக்கு தாம் தள்ளப்படுவதாக ...

Read More »

‘‘ காற்று மண்டலத்தில் பறக்க ஆசை’’! – ஏஞ்சலினா ஜோலி

லண்டனில் விமானம் ஓட்ட பயிற்சி எடுத்து வருகிறார் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் மகன் நாக்ஸ். ஒன்பது வயது மகன் நாக்ஸ் ஹாலிவுட் நடிகை ஆஞ்சலினா ஜோலியின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து ஒரு விமானத்தை ஓட்ட கற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளார். அப்படி அவர் கற்றுக்கொள்ள உந்துதலாக இருந்த காட்சி மிகவும் சுவாரஸ்யமானது. ஏஞ்சலினா ஜோலியும் அவரது மகன் நாக்ஸும் ஒரு விமான நிலையத்தில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து மேலெழுவதையும் வேறொரு விமானம் தரையிறக்கப்படுவதையும் அவர்கள் அங்கு கண்டுகளித்தனர். அதன்பிறகுதான் விமானம் ஓட்டவேண்டும் ...

Read More »

நடேசனின் 14 வது நினைவுதினம் இன்று யாழில் !

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளடரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 வது நினைவுதினம் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. கடந்த 2004 ஆம்ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினர்களினால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார். குறித்த படுகொலை தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் வழங்கப்பட்டு கொலையாளிகள் இனங்காட்டப்பட்டபோதிலும் இதுவரையில் எந்த வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில் அவருடைய 14 வது நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்றது. இதன்படி இன்று பிற்பகல் 4.15 மணியளவில் யாழ்ப்பாணம் ...

Read More »