படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளடரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 வது நினைவுதினம் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
கடந்த 2004 ஆம்ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினர்களினால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
குறித்த படுகொலை தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் வழங்கப்பட்டு கொலையாளிகள் இனங்காட்டப்பட்டபோதிலும் இதுவரையில் எந்த வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில் அவருடைய 14 வது நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இதன்படி இன்று பிற்பகல் 4.15 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான வீதி நீதிமன்ற கட்டத் தொகுதிக்கு அருகில் உள்ள கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியடியில் நடைபெறவுள்ளது.
அங்கு ஊடகவியலாளர் நடேசனினை நினைவு கூறும் வகையில் தூபிக்கு மலர் மாலை அணிவித்தும், தீபங்கள் ஏற்றி, பூக்கள் தூவியும் நினைவேந்தலை நடத்த யாழ்.ஊடக அமையம் ஏற்பாடு செய்துள்ளது.