அவுஸ்திரேலிய கடவுச்சீட்டில் புதிய மாற்றம் அதிரடியாக எதிர்வரும் ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது என அவுஸ்திரேலிய கடவுச்சீட்டு அலுவலகம் அறிவித்துள்ளது.
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்காக எடுக்கும் புகைப்படத்தில் prescription glasses-மூக்குக் கண்ணாடி அணிந்திருக்க முடியாது என்பது கட்டாயமாக்கப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த சுமார் 2 லட்சம் பேரின் புகைப்படங்கள் தெளிவற்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதான காரணமாக மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தது என கூறப்பட்டுள்ளது.
ஆகவே கடவுச்சீட்டு விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலிக்க முடியாத நிலைக்கு தாம் தள்ளப்படுவதாக கடவுச்சீட்டு அலுவலகம் கூறியுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு இந்நிலையை மாற்றுவதற்காக புதிய கட்டுப்பாட்டைக் கொண்டுவர தீர்மானித்ததாக மேலும் கடவுச்சீட்டு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒளியை பார்க்க முடியாத பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு அண்மையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு விதிவிலக்கு அளிப்பது குறித்து பரீசிலிக்கப்படும்.
மேலும் இவ்வாறானவர்கள் மருத்துவரின் சான்றிதழை கையளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.