சீனாவின் ‘கடன்வலை ராஜதந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் முதலீட்டு வேலைத்திட்டங்களை மையப்படுத்தி, அமெரிக்காவின் சட்டவாக்குனர்கள் சிறிலங்கா விஜயத்தை மேற்கொண்டிருப்பதாக அமெரிக்காவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா உட்கட்டுமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான பெருமளவான முதலீடுகளை சீனா வழங்கியுள்ளது.
எனினும் இதன் மூலம் சிறிலங்காவின் தமது கடன்பொறியில் சிக்கவைக்கும் ராஜதந்திரத்தை சீனா கையாள்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சுமத்துகின்றது.
இந்த நிலையில் சிறிலங்காவின் களநிலவரங்களை ஆய்வு நோக்கில் அமெரிக்காவின் அதிகாரமிக்க சட்டவாக்குனர்கள் குழு ஒன்று சிறிலங்கா வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.