Tag Archives: ஆசிரியர்தெரிவு

“அடுத்த படுகொலைகள் நோக்கி நகர்வோம்…”! -இயக்குநர் பா.இரஞ்சித்

நீட் தேர்வில் தோல்வியடைந்த பிரதீபா தற்கொலை குறித்து, ‘அடுத்த படுகொலைகள் நோக்கி நகர்வோம்…’ எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவு வெளியானது. இதில் 39 மதிப்பெண்களே எடுத்து தோல்வியடைந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். ஏழை விவசாயியின் மகளான இவர், கடந்த வருடமும் நீட் தேர்வு எழுதி 155 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், இந்த மதிப்பெண்ணுக்கே பல லட்சங்கள் கட்டி தனியார் மருத்துவக் கல்லூரியில்தான் படிக்க முடியும் என்பதால், இந்த வருடமும் ...

Read More »

கிம்-டிரம்ப் பேச்சுவார்த்தை – பாதுகாப்பு பணியில் கூர்க்கா வீரர்கள்!

சிங்கப்பூரில் வருகிற 12-ந்திகதி அமெரிக்கா – வடகொரியா அதிபர்கள் பேச்சுவார்த்தை நடப்பதால் பாதுகாப்பு பணியை தீவிரமாக கண்காணிக்கும் கூர்க்கா வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளளனர். இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் கூர்க்கா இன மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் நாடு முழுவதும் சென்று காவலாளி பணிகளையே செய்வது வழக்கம். மேலும் இந்திய ராணுவத்திலும் கூர்க்கா படை என்ற தனிப்பிரிவு செயல்படுகிறது. அவர்கள் காவல் பணிகளில் மிகவும் திறமையாக இருப்பதால் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பணிகளை செய்ய வைக்கின்றனர். ...

Read More »

காணாமல்போனவர்களின் விசாரணைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை விரைவில்!

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களிடமிருந்து முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டு விசாரணைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவசியமான ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மன்னார் மாத்தறை முல்லைத்தீவு மாவட்டங்களில் காணாமல்போனவர்களின் உறவினர்களை சந்தித்தாக தெரிவித்துள்ள சாலிய பீரிஸ் எதிர்வரும் 13 ம் திகதி திருகோணமலையில் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் அமர்வு இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்திற்கான ஆணையாளர்களை ஜனாதிபதி ...

Read More »

“சாதிச்சவன் சாதி என்னனு கூகுள்ல தேடாத!’-மதன் கார்க்கி

“பெரியார் இப்போ இருந்திருந்தா அவருடைய எண்ணங்கள் எப்படி வெளிப்பட்டிருக்கும் அப்படீங்கிறதை சுவாரஸ்யமான வழியில சொல்லணும்னு நினைச்சோம். ரமேஷ் தமிழ்மணிதான் இதை ஆரம்பிச்சு வெச்சார். இந்த ஆல்பத்துக்கு மியூசிக் டைரக்டரும் அவர்தான். அவர் என்கிட்ட, `நிறைய மெலோடி பாடல்கள் பண்ணியிருக்கீங்க. ஃபாஸ்ட் பீட்ல ஒரு பாடல் பண்ணலாமா?’னு கேட்டார். அப்போ கிடைச்ச ஐடியாதான், `பெரியார் குத்து’ ஆல்பம்!” – உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. “உங்களுக்கும் ரமேஷ் தமிழ்மணிக்குமான நட்பு எங்கேயிருந்து தொடங்கியது?”  “நானும் அவரும் சேர்ந்து ஷாரூக் கானை மெயின் கேரக்டரா வெச்சு, ஒரு கிராஃபிக் நாவலை வொர்க் ...

Read More »

டிரம்ப் – கிம் சிங்கப்பூர் சந்திப்புக்கான நேரம் அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் வருகிற 12-ம்திகதி காலை 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும், வட கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார். வருகிற 12-ந் திகதி சிங்கப்பூரில் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கிய கோடீசுவரர் மரணம்!

ஆஸ்திரேலியாவில் தொழில் மற்றும் வர்த்தகத்தில் தனக்கான முத்திரை பதித்து வளர்ச்சி கண்டவர் இளம் வயது கோடீசுவரர் அலி பானட். இவரது ஆடம்பரமான வாழ்க்கைமுறை பல நேரங்களில் செய்தியாகவும் வெளிவந்ததுண்டு.இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவ சோதனையில் இவருக்கு புற்று நோய் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. மட்டுமின்றி அடுத்த 7 மாதங்களில் மரணம் ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில் தமது சொத்துக்கள் முழுவதையும் ஏழைகளுக்கு தானமாக வழங்க விரும்பிய அலி பானட், உடனடியாக அதற்கான பணியிலும் ...

Read More »

சிறிலங்கா இராணுவ ஊடகப் பேச்சாளருக்கு ஊடகச் சந்திப்புகளுக்கு தடை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில், வாராந்தம் நடைபெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு, இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்துவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க விடுத்துள்ள விசேட கட்டளையின் கீழ், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. “இராணுவ அதிகாரி ஒழுக்கமானவராக இருத்தல் வேண்டும், இராணுவ அதிகாரிகள் சகலரையும் பாதுகாக்கும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபடவேண்டும் என்பதே இராணுவத் தளபதியின் நிலைப்பாடாகும்” அந்த வகையில், சில விடயங்கள் தொடர்பில், இராணுவம் பதிலளிக்கவேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ள இராணுவத் ...

Read More »

ஆக்கிரமிக்கப்பட்ட 34 ஏக்கர் காணி வலி வடக்கில் விடுவிப்பு!

வலி. வடக்கில் காங்கேசன்துறை பகுதியில் படையினரின் ஆக்கிரப்பில் இருத்து மேலும் 34 ஏக்கர் நிலம் நாளைய தினம் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்படவுள்ளது. வலி. வடக்கில் காங்கேசன்துறை வீதி கடற்கரையோரம் வரை முழுமையாக விடுவிக்கப்பட்டபோதும் வீதியின் ஒரு பக்கத்தில் குடியிருப்புக்களை ஆக்கிரமித்து பெரிய இராணுவ முகாம்கள் தற்போதும் காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படும் இராணுவ முகாமில் இருந்து 34 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் பலாலி இராணுவ முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டு அப்பகுதி நிலங்கள் உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. குறித்த 34 ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்படும் பட்சத்தில் ...

Read More »

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் சமீப காலமாக வர்த்தக மோதலில் ஈடுபட்டு உள்ளன. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 150 பில்லியன் டாலர் அளவுக்கு வரி விதிக்கப்போவதாக மிரட்டியதால் இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனால் இருநாடுகளும் பரஸ்பர இறக்குமதியை குறைத்தன.இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடைசியாக சீன வர்த்தகக்குழு ஒன்று கடந்த மாதம் வாஷிங்டன் பயணம் மேற்கொண்டு, டிரம்பின் பொருளாதார ஆலோசனைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ...

Read More »

சாதனை படைத்த ஆளப்போறான் தமிழன்!

பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `மெர்சல்’ படத்தில் இடம்பெற்றிருந்த `ஆளப்போறான் தமிழன்’ பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமான `மெர்சல்’ படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள `ஆளப்போறான் தமிழன்’ பாடலுக்கு சமூக வலைதளங்களில் ஏகோபத்திய வரவேற்பு கிடைத்திருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் வெளியாகிய இந்த பாடல் யூடியூப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது. யூடியூப்பில் இதுவரை இந்த பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியிருக்கிறது. ...

Read More »