காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களிடமிருந்து முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டு விசாரணைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசியமான ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மாத்தறை முல்லைத்தீவு மாவட்டங்களில் காணாமல்போனவர்களின் உறவினர்களை சந்தித்தாக தெரிவித்துள்ள சாலிய பீரிஸ் எதிர்வரும் 13 ம் திகதி திருகோணமலையில் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் அமர்வு இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்திற்கான ஆணையாளர்களை ஜனாதிபதி நியமித்தததை தொடர்ந்து பெப்ரவரி 28 ம் திகதி ஆணையகம் தனது பணிகளை ஆரம்பித்தமை குறிபபிடத்தக்கது.