Tag Archives: ஆசிரியர்தெரிவு

பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியுள்ளேன்!-மைத்திரி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை  பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். தமக்கு இருக்கும் அதிகாரத்தினை அடிப்படையாகக் கொண்டே பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவித்தால் கடிதத்தை பிரதமர் ரணிலுக்கு அனுப்பிவைத்துள்ளார். நேற்று(26) இரவு பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதையடுத்து ஜனாதிபதி மேற்படி அறிவித்தலை பிரதமர் ரணிலுக்கு அறிவித்துள்ளார்.

Read More »

மன்னார் மனித புதைகுழியில் 197 எலும்புக்கூடுகள்!

மன்னார் ச.தொ.ச விற்பனை நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வுப் பணியில் இதுவரை 197 எலும்புக்கூடுகள் அடையாளமிடப்பட்டுள்ளதுடன் மழை பெய்கின்றபோதும் இவ் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த மார்ச் மாதம் மன்னார் நகர் நுழை வாயில் பகுதியில் ச.தொ.ச விற்பனை நிலையம் ஒன்று அமைக்கும் நோக்குடன் அதற்கான கட்டுமானப்பணி வேலைகள் நடைபெற்ற வேளையில் அங்கு அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இவ் கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் இன்று வரை வெள்ளிக்கிழமை வரை 95 ...

Read More »

அசத்தல் அம்சங்களுடன் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம், கூகுள் ஏ.ஆர். கோர் வசதி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், ஏ.ஐ. வாய்ஸ் அசிஸ்டன்ட், பிரத்யேக ஏ.ஐ. பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக ஸ்லைடர் டிசைன் ...

Read More »

சீனாவின் உதவியுடன் விண்வெளிக்கு முதல் வீரரை அனுப்ப பாகிஸ்தான் திட்டம்!

பாகிஸ்தான் நாட்டில் இருந்து முதன்முதலாக மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் சீனாவின் உதவியுடன் 2022-ல் நிறைவேற்றப்படும் என அந்நாட்டு தகவல் தொடர்பு மந்திரி பவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசு சீனாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களை செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் இருந்து முதல் நபரை விண்வெளிக்கு அனுப்ப சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக பாகிஸ்தானில் இருந்து தயாரிக்கப்பட்ட 2 செயற்கைகோள்களை சீனாவின் ராக்கெட்டுகளை பயன்படுத்தி விண்ணில் ஏவப்பட்டது. 2022-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து முதல் வீரரை விண்வெளிக்கு அனுப்ப ...

Read More »

“றோ” குறித்து வாய்த்திறந்தார் மஹிந்த!

இந்தியப் புலனாய்வு அமைப்பான “றோ” தொடர்பில், கருத்துமோதல்களில் இலங்கை அரசியலில் சூடுபிடித்துள்ள நிலையில், ​​​“றோ” தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ கருத்துரைத்துள்ளார். ​​​“இந்தியாவின் “றோ” புலனாய்வுச் சேவையுடன் தொடர்புடைய அமைச்சர்கள் இருப்பார்களாயின், அவர்களின் பெயர்களை வெளியிடவேண்டுமென, மஹிந்த ராஜபக்‌ஷ கோரியுள்ளார். தங்கல்ல, ஹேனகடுவ விஹாரைக்கு, நேற்று (24) வருகை தந்திருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, மத வழிபாடுகளை நிறைவு செய்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “இந்த அரசாங்கத்துக்கு எந்நாளும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. “றோ” புலனாய்வுச் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 33 புகலிடக் கோரிக்கையாளரின் படகுகள்!

கடந்த 5 ஆண்டுகளில் 33 படகுகள் கடலில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது அல்லது திருப்பியனுப்பப்பட்டதாக தி அவுஸ்திரேலியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் குறித்த படகுகள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதில் 800 புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணம் செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நேசநாடுகளின் கூட்டு நடவடிக்கை மூலம் 78 ஆட்கடத்தல் நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 2525 பேர் அவுஸ்திரேலியாவுக்கு படகுப்பயணம் ...

Read More »

சுசி கணேசனால் நானும் சங்கடங்களை சந்தித்தேன் : அமலாபால்

இயக்குநர் சுசி கணேசனால் தானும் சில தர்ம சங்கடங்களை சந்தித்தேன் என நடிகை அமலாபால் கூறியுள்ளார். மீ டூ விவகாரத்தால் தினம் ஒரு திரைப்பிரபலம் சிக்கி வருகின்றனர். வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி, தமிழ் சினிமாவில் ஆரம்பித்து வைத்தார் பாடகி சின்மயி. அவர் மீது பல பெண்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர் இந்நிலையில், பெண் இயக்குநர் லீனா மணிமேகலை, தான் தொகுப்பாளினியாக இருந்தபோது, இயக்குநர் சுசி கணேசனால் காரில் வைத்து பாலியல் தொல்லைக்கு ஆளானதாக குற்றம் சாட்டினார். இதை, சுசி கணேசன் ...

Read More »

இயற்கை முறையில் பிறந்தநாள் கொண்டாடிய கோவை சிறுமி!

கோவையில், எல்.கே.ஜி படிக்கும் சிறுமி, சக பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து இயற்கை பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.கோவையில், எல்.கே.ஜி படிக்கும் சிறுமி, சக பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து இயற்கை பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். கோவையில் இயங்கி வரும், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பில் உறுப்பினராக இருப்பவர் சுரேஷ். இவருடைய மகள் சான்வி தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். இந்த நிலையில், சான்வியின் பிறந்தநாளை இயற்கை முறையில் கொண்டாடும் விதமாக, சுரேஷின் வீட்டில் செய்த நிலக்கடலை உருண்டை, ஒரு துணிப்பை மற்றும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டியதன் ...

Read More »

விட்டுக்கொடுப்பு செய்வதற்கு இந்த போராட்டத்தில் பங்குகொண்டிருக்கும் எவருக்கும் உரிமை இல்லை!

வட மாகாண முதலமைச்சராக எனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த நான் எனது முதலமைச்சர் பதவிக்காலம் பூர்த்தியாகிவரும் நிலையில் எனது எதிர்கால செயற்பாடுகள் எப்படி இருக்கப்போகின்றன என்பது தொடர்பாக தெளிவுபடுத்தும் நோக்கத்தில் தமிழ் மக்கள் பேரவையினூடாக உங்கள் அனைவரையும் இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். கடும் சவால்கள் நிறைந்திருந்த கடந்த 5 வருட காலத்தில் என்னுடன் பணியாற்றிய சக மாகாண சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், எனக்கு ஆதரவு நல்கிய நண்பர்கள், தோளோடு தோள் நின்று சேவையாற்றிய தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக ...

Read More »

தமிழ் மக்கள் பேரவையின் மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில்

தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இன்று (24.10.18) காலை ஆரம்பமாகியது. இந்நிகழ்வானது பேரவையின் இணைத்தலைவர் நீதியரசர் க.வி விக்னேஸ்வரன் தலமையில் கூட்டம் ஆரம்பமானது. இதன் போது அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர்.

Read More »