Tag Archives: ஆசிரியர்தெரிவு

பாதயாத்திரைக்கு தயாராகும் ஐ.தே.க!

ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “நீதியின் குரல்” என்ற பாதயாத்திரை மூலமாக நாட்டை ஒரே சக்தியாக ஒன்று திரட்டவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. எதிர் வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி குறித்த பாத யாத்திரை கொழும்பிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த வஜிர அபேவர்தன, “கொழும்பு நகர சபை வளாகத்திலிருந்து ஆரம்பமாகும் நீதியின் குரல் என்ற மக்கள் பாத யாத்திரை மொரட்டுவை பானந்துரை அளுத்கம அம்பலன்கொட ஹிக்கடுவ காலி மாத்தறை தேவுந்தர மற்றும் ...

Read More »

சிறைக்கு செல்லவுள்ள முக்கியஸ்தர்கள்!

எதிர் வரும் காலங்களில் வெகு விரைவில் சிறைக்கு செல்லவிருக்கும் அனைவரினதும் பெயர் விபரங்களையும் தம்பர அமில தேரர் வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தம்பர அமில தேரர் விரைவில் சிறைக்கு தண்டனை பெற்று செல்லவிருக்கும் நபர்களின் பெயர் விபரங்களையும் எந்தெந்த குற்றங்களுக்காக சிறைக்கு செல்லவுள்ளார்கள் என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாகவே மஹிந்த தரப்பு மைத்திரியோடு இணைந்து ஜனநாயத்திற்கு எதிரான சதி முயற்சியில் இறங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.   அந்த வகையில், 1. மூன்றரை கோடி ரூபாய் ஊழல் மோசடி ...

Read More »

நீதிமன்றத்தில் அனைத்து உண்மைகளையும் தெரிவிக்க தயார்!

பொறுப்பு வாய்ந்த சிரேஸ்ட அதிகாரி என்றவகையில் நான் எந்த குற்றத்தையும் வேண்டுமென்று செய்யவில்லை என தெரிவித்துள்ள முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜயகுணவர்த்தன நீதிமன்றத்தின் முன்னாள் அனைத்து உண்மைகளையும் சொல்வதற்கு தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார் சிஐடியினரால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகமொன்றிற்கு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நான் எனது பதவிக்காலத்தில் எந்த சட்டவிரோதமான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை வேண்டுமென்றே எந்த தவறையும் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.   இதன் காரணமாக எனக்கு தெரிந்த அனைத்தையும் நீதிமன்றத்தின் முன்னிலையில் தெரிவிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

ஆஸ்திரேலியாவை விட இந்திய அணியே திறமை வாய்ந்தது- விராட்கோலி

ஒட்டு மொத்த திறமை அளவில் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணியே சிறந்தது என இந்திய கப்டன் விராட்கோலி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. சிட்னி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது. ஷார்ட் 29 பந்தில் 33 ரன்னும் (5 பவுண்டரி), கேப்டன் ஆரோன் பிஞ்ச் 23 பந்தில் 28 ரன்னும் (4 ...

Read More »

நியூசிலாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 145 திமிங்கலங்கள்!

நியூசிலாந்தில் ஸ்டீவர்ட் தீவில் 145 ‘பைலட்’ இன திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களை கவலை அடைய செய்துள்ளது. நியூசிலாந்தில் தென் தீவுக்கு அருகே 30 கி.மீ தொலைவில் உள்ள ஸ்டீவர்ட் தீவில் 145 ‘பைலட்’ இன திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. இப்பகுதியில் ஏற்கனவே பல திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. இந்தநிலையில் மீண்டும் ஏராளமான திமிங்கலங்கள் இறந்துள்ளது அப்பகுதி மக்களை கவலை அடைய செய்துள்ளது. அதற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

Read More »

சிறிலங்கா சபாநாயகரின் உருவ பொம்மைக்கு தீ மூட்டி ஆர்ப்பாட்டம்!

நாடாளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பத்து இலட்சம் கையொப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் வலப்பனை தேர்தல் பிரதேசமான நுவரெலியா, இராகலை நகரில் நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவின் உருவ பொம்மைக்கும் தீ மூட்டப்பட்டது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்காவின் தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் இராகலை நகர பௌத்த ஆலயத்துக்கு அருகில் ஒன்று கூடிய கட்சி ஆதரவாளர்கள் பேரணியாக சென்று இராகலை மேல் நகரதொகுதி சந்தியில் ...

Read More »

மஹிந்தவுக்கு எதிரான மனு 3ஆம் திகதிக்கு முன் விசாரணை!

தற்போதய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவியும் அவரது அமைச்சரவையும் சட்டத்திற்கு விரோதமானது என உத்தரவிடுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  தாக்கல் செய்த மனு 11.30- 12.03 க்கு இடையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும்  ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த 122 உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு இன்று (26) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ...

Read More »

சிறிலங்கா அரசியல்வாதிகளுக்கு பயணத் தடை!

தற்போதைய அரசியல் நெருக்கடிகள் நீடித்தால் சிறிலங்கா மீது தடைகளை விதிப்பது குறித்து சில நாடுகள் சிந்தித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, வெளிநாட்டு நிதி உதவிகள் மற்றும் வேறு வடிவிலான உதவிகள் நிறுத்தப்படலாம் என்றே எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போது, சில நாடுகள், வேறு விதமான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பு மீறல்களுக்கு நேரடிப் பொறுப்பாக இருக்கும், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மீது சில நாடுகள் தடைகளை விதிக்கக் கூடும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் ...

Read More »

சமூக ஊடகங்களில் இலக்குவைக்கும் மகிந்த ஆதரவாளர்கள்!

மகிந்த ராஜபக்ச தரப்பினரை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்கடிப்பதற்கு உதவிய- ஒக்டோபர் 26 ம் திகதிக்கு பின்னர் ஜனநாயகத்திற்கான நிலைப்பாட்டில் தடுமாற்றமின்றி காணப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இலக்குவைக்கும் நடவடிக்கைகளை மகிந்தராஜபக்சவிற்கு ஆதரவான சமூக ஊடகங்கள் முன்னெடுத்துள்ளன என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சில் பணியாற்றிய பின்னர் நாமல்ராஜபக்சவின் உதவியுடன் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றியவருமான செனானி சமரநாயக்க தனது டுவிட்டர் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை இலக்குவைத்து கருத்துக்களை பதிவு  செய்கின்றார் ...

Read More »

கராச்சியில் சீன தூதரக தாக்குதலுக்கு இந்தியாவில் திட்டமிடப்பட்டது- பாகிஸ்தான்

கராச்சியில் உள்ள சீன தூதரக தாக்குதலுக்கு இந்தியாவில் திட்டமிடப்பட்டது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பாகிஸ்தான் கராச்சியில் உள்ள சீன தூதரகம் நேற்று முன்தினம் தாக்கப்பட்டது. அதன் உள்ளே புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு மற்றும் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். அதில் 4 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சீன தூதரக தாக்குதலுக்கு டெல்லியில் திட்டமிடப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கருதுகின்றனர். இந்த தாக்குதலை பலுசிஸ்தான் விடுதலைப்படை என்ற அமைப்பு நடத்தியுள்ளது. அதன் கமாண்டர் அஸ்லம் என்கிற ...

Read More »