தற்போதைய அரசியல் நெருக்கடிகள் நீடித்தால் சிறிலங்கா மீது தடைகளை விதிப்பது குறித்து சில நாடுகள் சிந்தித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, வெளிநாட்டு நிதி உதவிகள் மற்றும் வேறு வடிவிலான உதவிகள் நிறுத்தப்படலாம் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், தற்போது, சில நாடுகள், வேறு விதமான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலமைப்பு மீறல்களுக்கு நேரடிப் பொறுப்பாக இருக்கும், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மீது சில நாடுகள் தடைகளை விதிக்கக் கூடும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.