நியூசிலாந்தில் ஸ்டீவர்ட் தீவில் 145 ‘பைலட்’ இன திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களை கவலை அடைய செய்துள்ளது.
நியூசிலாந்தில் தென் தீவுக்கு அருகே 30 கி.மீ தொலைவில் உள்ள ஸ்டீவர்ட் தீவில் 145 ‘பைலட்’ இன திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. இப்பகுதியில் ஏற்கனவே பல திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின.
இந்தநிலையில் மீண்டும் ஏராளமான திமிங்கலங்கள் இறந்துள்ளது அப்பகுதி மக்களை கவலை அடைய செய்துள்ளது. அதற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
Eelamurasu Australia Online News Portal