Tag Archives: ஆசிரியர்தெரிவு

இனம் மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை பாசிசத்தை நோக்கிய ஒரு நிலையான பாதையில் தவிர்க்க முடியாத உயரத்தை எட்டியுள்ளது

யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். கடுமையான இன மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை பாசிசத்தை நோக்கிய ஒரு நிலையான பாதையில் தவிர்க்க முடியாத அளவுக்கு உயரத்தை எட்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

மணிவண்ணன் கைது

யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். 011 ஆகஸ்ட் 11 ம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களிற்காகவே யாழ்மாநகர முதல்வர் மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல் துறை பேச்சாளர் அஜித்ரோகாண தெரிவித்துள்ளார். யாழ்மாநகரசபையை சேர்ந்த ஐந்து பணியாளர்கள் காவல் துறையின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறைக்கு பயங்கரவாத விசாரணை பிரிவினரும் மேற்கொண்ட விசாரணைகளின் போது அந்த ஐவரும் அணிந்திருந்த சீருடைகள் யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகளின் காவல்துறையினர் ...

Read More »

தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலிலவைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைகளின் பின்னர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தலின் கீழ் இளைஞன் மீது பி அறிக்கையை கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர். இளைஞன் சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையானார். ...

Read More »

இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை

கொரோனா அதிகரிப்பு எதிரொலியாக இந்திய பயணிகள் நியூசிலாந்து வர தடை விதித்து அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து வர அனுமதியில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார்.  

Read More »

இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியீடு – முதல் இடத்தில் முகேஷ் அம்பானி

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியலில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பாளர்கள் முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளனர். 2021-ம் ஆண்டுக்கான இந்திய கோடீசுவரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இரண்டாம் இடத்தில் உள்ளார். அதானி கிரீன், அதானி ...

Read More »

11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய சட்டமா அதிபர் அனுமதி

11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்வதற்கு சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கியுள்ளார். ஐஎஸ், அல்ஹைதா உட்பட இஸ்லாமிய அமைப்புகளைத் தடை செய்வதற்கு சட்டமா அதிபர் தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளார். சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு செயலாளர் நிசார ஜயரட்ண இதனைத் தெரிவித்துள்ளதுடன் தீவிரவாத அமைப்புகளுடனான தொடர்பு காரணமாகவே இந்த அமைப்புகள் தடைசெய்யப்பட்டன எனக் குறிப்பிட்டுள்ளார். 1.ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) 02.சிலோன் தௌஹீத் ஜமாஅத் (CTJ) 03.சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத் (SLTJ) 04.அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ACTJ) 05.ஜம்இய்யதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா (JASM) ...

Read More »

இலங்கை கொரோனா கொத்தணி உருவாக கூடிய ஆபத்து காணப்படுகின்றது!

இலங்கை நாளாந்தம் 100 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டில் கொரோனா கொத்தணி உருவாகக் கூடிய ஆபத்து காணப்படுகின்றது என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத் தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். பொது மக்கள் சுகாதார வழிகாட்டிகளை கடைப்பிடிக்காவிட்டால் நாட் டில் கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்புள்ளதாக வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். மக்கள் ஒன்று கூடும் இடம், சமூக இடைவெளியைப் பின்பற்றாத சந்தர்ப் பத்தில் கொரோனா தொற்று ஏற்படலாம்.நாளாந்தம் 100 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் ...

Read More »

மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்த அழகி

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதை வேளையில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தநிலையில் தாய்லாந்தில் நடைபெற்ற அழகி போட்டி ஒன்றில் கலந்து கொண்ட மியான்மர் நாட்டு அழகி ஹான் லே, மியான்மர் ராணுவத்துக்கு எதிராக பேசியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி ...

Read More »

தேவிபுரத்தில் துப்பாக்கி , ரவைகள் மீட்பு

புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து, துப்பாக்கியொன்றும் ரவைகளும் இன்று (06) மீட்கப்பட்டுள்ளன. காணி உரிமையாளர்  காணியைத் துப்புரவு செய்யும் போது, நிலத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில்,  வெடிபொருட்கள் இனம் காணப்பட்டன. இது தொடர்பில்  புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைஅடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த  காவல் துறை , உரப்பை ஒன்றில் பொதிசெய்யப்பட்ட நிலையில், டி56 ரக துப்பாக்கி ஒன்றும் அதன் ரவைகள் 420உம் மீட்கப்பட்டுள்ளன.

Read More »

மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு ஏற்ப முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது கடமைகளை நிறைவேற்ற தவறியபின்னரும் வெட்கமின்றி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார் என மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். நாட்டின் மீது தாக்குதல் இடம்பெற்றவேளை மைத்திரிபாலசிறிசேன வெளிநாட்டிலிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள மல்கம் ரஞ்சித் மைத்திரிபால சிறிசேனவின் தலைமத்துவ திறன்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். தாக்குதல் இடம்பெறலாம் என்பது தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்க ...

Read More »