புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து, துப்பாக்கியொன்றும் ரவைகளும் இன்று (06) மீட்கப்பட்டுள்ளன.
காணி உரிமையாளர் காணியைத் துப்புரவு செய்யும் போது, நிலத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், வெடிபொருட்கள் இனம் காணப்பட்டன.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைஅடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த காவல் துறை , உரப்பை ஒன்றில் பொதிசெய்யப்பட்ட நிலையில், டி56 ரக துப்பாக்கி ஒன்றும் அதன் ரவைகள் 420உம் மீட்கப்பட்டுள்ளன.
Eelamurasu Australia Online News Portal