யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
011 ஆகஸ்ட் 11 ம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களிற்காகவே யாழ்மாநகர முதல்வர் மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல் துறை பேச்சாளர் அஜித்ரோகாண தெரிவித்துள்ளார்.
யாழ்மாநகரசபையை சேர்ந்த ஐந்து பணியாளர்கள் காவல் துறையின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து காவல் துறைக்கு பயங்கரவாத விசாரணை பிரிவினரும் மேற்கொண்ட விசாரணைகளின் போது அந்த ஐவரும் அணிந்திருந்த சீருடைகள் யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகளின் காவல்துறையினர் பயன்படுத்திய சீருடைகள் போன்றவை என்பது உறுதியாகியது என காவல் துறைக்கு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal