யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடுமையான இன மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை பாசிசத்தை நோக்கிய ஒரு நிலையான பாதையில் தவிர்க்க முடியாத அளவுக்கு உயரத்தை எட்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal