வவுனியாவில் அமைந்துள்ள தேவாயலங்களிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வவுனியா தலைமை காவல் துறை நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். வவுனியா றம்பைக்குளத்தில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயம் மற்றும் முக்கிய தேவாலயங்களில் இன்றையதினம் இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டு வருவதுடன், நகரின் முக்கிய பகுதிகள், மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களிலும் காவல் துறை மற்றும் இராணுவத்தினர் மோப்பநாய்கள் சகிதம் விசேட தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். மன்னார் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றிற்கு ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ஆஸ்திரேலியாவில் உணவிற்கான உதவிகளை நம்பி 14 லட்சம் மக்கள்
கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள மந்தநிலையினால், உணவிற்கான உதவிகளை நம்பியிருக்கும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது. இன்றைய சூழலில், ஆஸ்திரேலியாவில் 14 லட்சம் மக்கள் உணவிற்கான உதவிகளைப் பெறுகின்றனர். இதுவே பெருந்தொற்று சூழலுக்கு முன்னதாக சுமார் 8 லட்சம் மக்களே இந்த உதவிகளைப் பெற்றுள்ளனர். பெருந்தொற்று சூழலினால், உணவு உதவிகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை 78 சதவீதம் அதிகரித்துள்ளது என கொரோனாவுக்கான ஆஸ்திரேலிய செனட் குழுவிடம் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய உணவு வங்கியின் தலைமை நிர்வாகி Brianna Casey. வெளிநாட்டு மாணவர்கள், தற்காலிக விசா கொண்டிருப்பவர்கள், ...
Read More »புலம்பெயர்வதில் குடிவரவு சிக்கல்களை சமாளிப்பது என்பது காத்திருத்தல், அச்சம், மன நலன் பாதிப்பு
ஆஸ்திரேலிய குடியுரிமைக் கொண்ட சதிந்தரும் இந்தியாவில் உள்ள அவரது கணவரான சுமித்தும் மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது Partner விசாவுக்கான விண்ணப்பம் ஆஸ்திரேலியாவில் நிராகரிக்கப்பட்டு இருப்பதால், இப்படி ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவர்களது குடிவரவு வழக்கறிஞராக செயல்படுபவர் யுன் சென். சதிந்தர்- சுமித்திற்கு திருமணமான போதிலும், இவர்கள் பேஸ்டைம், இன்னும் சமூக ஊடகங்கள் வழியாக உரையாடிக் கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ள போதிலும், இவர்களுக்கு இடையிலான உறவு உண்மையானதல்ல என அவர்களது Partner விசா ஆஸ்திரேலிய குடிவரவுத்துறையால் ...
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்று லண்டனில் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்ட பெண்
லண்டனின் தேவாலயத்தில் இலங்கையின் உயிர்த்த ஞாயிறு பாணியில் தாக்குதலொன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக பிரிட்டனின் முதல் பெண்தற்கொலை குண்டுதாரி என கருதப்படுபவர் காவல் துறையினர் விசாரணையில் தெரிவித்துள்ளார். சாபியா சைக் என்ற 36 வயது பெண் பிரிட்டனின் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களிடம் அவர்கள் யார் என தெரியாத நிலையில் இதனை தெரிவித்துள்ளார். சிறிய வரலாறு ஒன்றை உருவாக்க விரும்புகின்றேன் தலைநகரில் ஒரு பயங்கரமான நாளில் என்னால் முடிந்த எத்தனை பேரை கொலை செய்யமுடியுமோ அத்தனை பேரை கொலை செய்ய விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். போதைப்பொருளிற்கு ...
Read More »தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை 21 நாட்களுக்கு நீடிக்கவேண்டும்
தனிமைப்படுத்தல் நடவடிக்கையை 21 நாட்களுக்கு அதிகரிப்பதற்கான யோசனையை தேர்தல் ஆணைக்குழு முன்வைக்கவுள்ளது. தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களிற்கான தனிமைப்படுத்தல் காலத்தினை 21 நாட்களுக்கு அதிகரிக்கவேண்டும் என்ற யோசனையை தேர்தல் ஆணைக்குழு சுகாதார அதிகாரிகளிடம் ஆறாம் திகதி முன்வைக்கவுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னர் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக இந்த யோசனையை முன்வைக்கவுள்ளதாக மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதேவேளை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை தேர்தல் வாக்களிப்பு நேரம் முடிவடைவதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னர் வாக்களிப்பு நிலையங்களிற்கு கொண்டுவரமுடியுமா என்பது குறித்து ...
Read More »சம்பந்தனை நான் முன்பே கண்டுகொள்ளவில்லை……
சம்பந்தன் என்னுடைய நண்பர். அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார். ஆனால் அவருடைய பார்வை வித்தியாசமாக இருந்தது. அதனை நான் முன்பே கண்டுகொள்ளவில்லை. பின்னர்தான் கண்டுகொண்டேன் என்று முன்னாள் வடமாகண முலமைச்சரும் ஓய்வு பெற்ற நீதியரசரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் வடமாகண முலமைச்சரும் ஓய்வு பெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் மட்டக்களப்பு கொம்மாதுறையில் ...
Read More »ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் தமிழர்
ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் முதல் தமிழர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வசித்து வரும் பழனிச்சாமி ஒச்சாத்தேவர் . அவரை அரசு அதிகாரியாகவும் இந்தியா மற்றும் தமிழ் சமூகங்களின் முக்கிய தலைவராக பணிபுரிந்து வருகிறார். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தலைநகர் பிரிஸ்பேன் நகரில் 31- 10 -2020 பாராளுமன்றத் தேர்தலில் ஆஸ்திரேலியாவில் இருபெரும் கட்சிகளில் ஒன்றான ஆளும்கட்சி லேபர் கட்சியின் தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார் பழனிசாமி ஒச்சாத்தேவர். அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர்.தற்போது ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து நாடாளுமன்ற தேர்தலில் ...
Read More »ஆஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கையாளர்களை விடுவிக்கக்கோரி போராட்டம்!
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நகரில் உள்ள ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்களை விடுவிக்கக்கோரி நடந்த போராட்ட ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர். பிரிஸ்பேன் நகரில் உள்ள கங்காரு பாய்ண்ட் சென்ட்ரல் ஹோட்டலில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 120+ அகதிகளை விடுவிக்கக்கோரி இப்போராட்டம் நடைபெற்றிருக்கின்றது. இப்போராட்டத்தினை நடத்த 2 மணிநேரம் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த நேரத்தை கடந்து தர்ணா செய்த 37 பேரை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற இந்த ...
Read More »ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கான திட்டத்தை நினைத்தாலே….
ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கான திட்டத்தை நினைத்தாலே படுபயங்கரமாக இருக்கிறது என்று மைக் ஹசி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலக கோப்பையில் 16 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. ஏற்கனவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு இந்த வருடம் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என்று தெரிவித்துவிட்டது. ஆனால், ஐசிசி இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்காமல் இருக்கிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பையை நடத்துவதற்கான திட்டமிடுதலை நினைத்தாலே ...
Read More »ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய நியூசிலாந்து சுகாதார மந்திரி ராஜினாமா
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தனது குடும்பத்தினரை கடற்கரைக்கு அழைத்துச்சென்றது போன்று பல முறை கட்டுப்பாடுகளை மீறியதால் கண்டனங்களுக்குள்ளான நியூசிலாந்து சுகாதார மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நியூசிலாந்து நாட்டில் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கொரோனா வைரஸ் பரவல் பிரச்சனையை மிக நேர்த்தியாக கையாண்டார். இதன் காரணமாக அங்கு கொரோனா வைரஸ் தொற்று 1528 பேருக்கு மட்டுமே பாதித்து, 22 பேர் மரணம் அடைந்த நிலையில் கட்டுப்படுத்தப்பட்டது. இது அவருக்கு பலத்த பாராட்டுக்களை சர்வதேச அளவில் பெற்றுத்தந்தது. அதைத் தொடர்ந்து அங்கு கடந்த ...
Read More »