Tag Archives: ஆசிரியர்தெரிவு

அவுஸ்திரேலியா விக்டோரியாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி

விக்டோரியாவின் Mildura பகுதியில் Murray ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் Murray ஆற்றுக்குச் சென்ற இவ்விளைஞர் நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது. இவரைத் தேடும்பணி வெள்ளி பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டுவந்தநிலையில் குறித்த இளைஞரின் சடலம் Murray ஆற்றிலிருந்து மீட்கப்பட்டதாக  காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர். மெல்பேர்னில் கல்விகற்றுவரும் இலங்கையைச் சேர்ந்த21 வயது தமிழ் இளைஞரே இவ்வாறு மரணமடைந்ததாகவும், தொழில்நிமித்தம் தனது நண்பர்களோடு அவர் Mildura-வுக்கு சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

Read More »

ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லீம் அகதிகளுக்கு ஹலால் உணவு மறுக்கப்படுகின்றதா?

ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களுக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக அங்கீகாரம் பெற்ற ஹலால் உணவை வழங்கப்படுவதில்லை என ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையத்திடம் முஸ்லீம் அகதிகளும் தஞ்சக்கோரிக்கையாளர்களும் முறையிட்டுள்ளனர். நவுரு மற்றும் பப்பு நியூ கினியாவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 100 பேர் பிரிஸ்பேன் நகரில் உள்ள கங்காரூ பாய்ண்ட் எனும் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இந்த ஹோட்டல் அகதிகளை சிறைப்படுத்தும் தடுப்பிற்கான மாற்று இடமாகவும் அறியப்படுகின்றது. இங்கு வைக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் முஸ்லீம் ...

Read More »

ஈழ தமிழ் மக்களின்  தலைவிதி இருட்டில் இருந்த சந்தர்ப்பதில் ஆறுமுகன் முழு ஆதரவளித்தார்

ஈழ தமிழ் மக்களின்  தலைவிதி இருட்டில் இருந்த சந்தர்ப்பதில் எமது நிலையை விளக்கி ஆதரவை கேட்ட போது முழுமையான ஆதரவை வழங்கியதுடன் வடக்கு, கிழக்கு மக்களின் போராட்டத்திற்கு எப்போதும் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆதரவளித்துள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தல் நேற்று அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தொண்டமான் குடும்பம் மலைநாட்டு தமிழ் மக்களை பிரிதிநிதிப்படுத்தியுள்ளது. மலைநாட்டு தமிழ் ...

Read More »

அவுஸ்திரேலியால் இலங்கையர் ஒருவரின் மோசமான செயற்பாடு! பல சிறுமிகள் பாதிப்பு

அவுஸ்திரேலியா – மெல்பேர்ன் நகரில் வாழும் இலங்கையர் ஒருவர் மீது சிறுவர் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சிறு பிள்ளைகள் மற்றும் இளம் பெண்களிடம் தவறான புகைப்படம் பெற்றுக் கொள்வதோடு மேலும் பல புகைப்படங்களை அனுப்புமாறு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவர்களை தண்டிக்கும் வகையில் அவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் குறித்த இலங்கையர் அனுப்பியுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 12 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் 23 ...

Read More »

மலையகமக்களின் உரிமைகளை வெல்வதற்கு நாம் ஆதரவு

மலையகமக்களின் உரிமைகளை வெல்வதற்கான முயற்சிகளுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி தனது முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்றுஉரையாற்றிய கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்துள்ளார். மலையகமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானோ அல்லது வேறு எந்த அமைச்சரோ மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தனது கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

அராலி இராணுவ முகாம் பகுதியில் குண்டுகள் வெடிப்பு

யாழ்ப்பாணம் அராலி இராணுவ முகாம் பகுதியில் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாரிய வெடிச்சத்தங்கள் யாழ். மக்கள் பதற்றமடையச் செய்தன. எனினும், அப்பகுதியில் பயன்பாட்டிற்கு உதவாத வெடிப்பொருட்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பட்டதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இவ்விடயம் குறித்து அச்சமடையத் தேவையில்லை எனவும் இராணுவ ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

ஆஸ்திரேலியாவில் உள்ள சீனர்களின் வீடுகளில் திடீர்ச் சோதனைகள் – சீனா கண்டனம்

ஆஸ்திரேலியாவில் உள்ள சீன அரசாங்க ஊடகச் செய்தியாளர்களின் வீடுகளில் திடீர்ச் சோதனைகள் நடத்தப்பட்டது நியாயமில்லாத செயல் என்று சீனா குறைகூறியுள்ளது. ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டுத் தலையீடு இருக்கிறதா என்பதை விசாரிக்கும் நோக்கில் அவர்களின் வீடுகள் சோதிக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், சீன நிருபர்கள் நால்வரின் வீடுகளைக் கடந்த ஜூன் மாதம் சோதனையிட்டதாகச் சீன ஊடகங்கள் தெரிவித்தன. விசாரணையை அடுத்து அந்த நால்வரும் ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேறினர். மேலும், இரண்டு சீனக் கல்விமான்களின் விசாக்களும் ரத்துசெய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட சீன நாட்டவர் 6 பேரும் வேவு பார்த்தல், ...

Read More »

சீன மாணவர்கள் 1,000 பேரின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா

அமெரிக்காவில் கல்வி பயின்றுவரும் சீன மாணவர்களில் 1,000 பேரின் விசாவை டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. தென்சீன கடல் விவகாரம், வர்த்தகம் தொடங்கி அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் கொரோனா வைரசுக்கு பின் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த மோதலுக்கு பின் ஹூஸ்டனில் நகரில் செயல்பட்டு வந்த சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபட்டதாகவும், அதை உடனடியாக மூடவும் அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஹூஸ்டனில் செயல்பட்டு வந்த சீன தூதரகம் மூடப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் ...

Read More »

20 வது திருத்தம் – நீதித்துறையின் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்ன?

20 வது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காகச் சட்டத்தரணிகள் சங்கத்தினால் நியமிக்கப்படவுள்ள குழுவினர் நீதித்துறையின் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றியும் விரிவாக அவதானம் செலுத்தவேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 வது திருத்தயோசனையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் சில விடயங்கள் நீதிமன்றத் தினதும் சட்டத்துறையினதும் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடியதாக இருக்கின்றது. சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைத் தெரிவுசெய்வதற்கான எதிர்வரும் தேர்த லில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் 20 ஆவது திருத்தம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத் ...

Read More »

மாவீரன் திலீபனின் நினைவு தினத்தை கடைப்பிடிக்க எமக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது!

எமது உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு தமிழ் தேசமும் சிங்கள தேசமும் சம அந்தஸ்துடன் இணைந்தால் மாத்திரமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தனது உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது எம் மீது ஒரு இனப்படுகொலையை புரிந்து விட்டு இப்போது இங்கு வந்து நாட்டை கட்டியெழுப்பவது பற்றி கதைத்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். அபிவிருத்தி எனும் பெயரில் தமிழர்களுக்கான வாய்ப்புகள் மறுதலிக்கபடுகின்றன. மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி எனும் பெயரில் அப்பகுதியை சார்ந்த மீனவர்களுக்கான ...

Read More »