அராலி இராணுவ முகாம் பகுதியில் குண்டுகள் வெடிப்பு

யாழ்ப்பாணம் அராலி இராணுவ முகாம் பகுதியில் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாரிய வெடிச்சத்தங்கள் யாழ். மக்கள் பதற்றமடையச் செய்தன.

எனினும், அப்பகுதியில் பயன்பாட்டிற்கு உதவாத வெடிப்பொருட்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பட்டதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் இவ்விடயம் குறித்து அச்சமடையத் தேவையில்லை எனவும் இராணுவ ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.