Tag Archives: ஆசிரியர்தெரிவு

முன்னாள் போராளிகளின் வளர்ச்சிக்காக அரசோ, சர்வதேசமோ உதவவில்லை!

“போர் முடிவுக்கு வந்து 11 ஆண்டுகள் முடிந்தும் அரசாலோ பன்னாட்டு அமைப்புகளாலோ முன்னாள் போராளிகளின் வளர்ச்சிக்காக எவ்வித உதவிகளும் கொடுக்கப்படவில்லை” என ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத்தொடரில் வழமைபோன்று இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்டுள்ள ...

Read More »

தமிழர் தாயகத்தை பாதுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்!

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கான சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இன அழிப்பிலிருந்து ஈழத் தமிழர்களின் தாயகத்தை பாதூக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இன அழிப்பை பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்” என ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் வலியுறுத்தப்பட்டது. ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ...

Read More »

அதிபர் டிரம்ப், மெலனியா டிரம்புக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், டிரம்புக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. புதன்கிழமை நடந்த பிரச்சார பேரணியின்போது டிரம்புடன் ஹோப் ஹிக்சும் சென்றிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டயடுத்து, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தனது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த டிரம்ப், தானும் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக ...

Read More »

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

மட்டக்களப்பு காவல் துறையால் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா. அரியேந்திரன், சீ.யோகேஸ்வரன், மட்டு மாநகர சபை மேஜர்.ரி.சரவணபவான், நா.சங்கரப்பிள்ளை (நகுலேஸ்) ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப்பட்ட வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (02) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னியில் எடுத்கப்பட்டபோது இது தவறான செயல் என நீதவான் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமத்திரன் தெரிவித்தார் கடந்த 26 ம் திகதி தியாக தீபம் திலீபனின் நினைந்வேந்தல் செய்ய முற்பட்டார்கள் என குற்றச்சாட்டு ...

Read More »

தமிழரசுக் கட்சியின் தற்காலிக பதில் பொதுச் செயலாளராக சத்தியலிங்கம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தற்காலிகப் பதில் பொதுச் செயலாளராக முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளராக செயற்பட்டு வந்த முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்தமையை அடுத்து பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமாகக் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக கட்சி மட்டத்தில் தற்காலிகப் பதில் பொதுச் செயலாளரொருவரை நியமிக்கும் பொருட்டு துணைத் செயலாளர்களாகச் செயற்பட்டு வந்த வைத்தியர் ப. சத்தியலிங்கம் மற்றும் ...

Read More »

ஆஸ்திரேலியா: விக்டோரியா மாநிலத்தில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் குறைந்துள்ளன!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் புதிதாகக் கிருமித்தொற்று உறுதியானோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. அங்குப் புதிதாக 13 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானதாகவும் நால்வர் மாண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 14 நாள்களாக மெல்பர்னிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிருமிப்பரவல் குறைந்துவருவதாக அவர்கள் குறிப்பிட்டனர். மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் (Daniel Andrews)   அதன் தொடர்பில் செய்தியாளர் கூட்டம் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாத மத்தியில் மாநிலத்தில் COVID-19 தொடர்பான வழக்கநிலையை உறுதிசெய்வதற்கான முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

Read More »

வெளிவிவகாரத்தைக் கையாள்வதற்கான குழு ஒன்றை தமிழ்க் கட்சிகள் இணைந்து அமைக்க வேண்டும்

“தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் சார்பில் வெளிவிவகாரத்தைக் கையாள்வதற்கான குழு ஒன்றை அமைக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவையும், ஐ.நா. வையும் கையாளக் கூடிய குழு அவசியம். பிரத்தியேகமாக இந்தியாவைக் கையாள்வதற்கான தனியான குழு ஒன்றை அமைப்பது கூட பயனுள்ளதாக இருக்கும்” என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார். அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் குறித்து தற்போது இடம்பெறும் சர்ச்சை மற்றும், தமிழ்க் கட்சிகளிடையேயான இணக்கப்பாடு – எதிர்கால வேலைத் திட்டம் என்பன தொடர்பில் ‘தினக்குரல்‘ இணையத் தளத்துக்குக் கருத்து ...

Read More »

எங்கே.. எங்கே.. எங்கள் அப்பா எங்கே?

சிறுவர் தினத்திலும் வீதிக்கிறங்கி போராடும் சிறார்கள் இன்று சர்வதேச சிறுவர் தினமாகும். அதனையொட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை (01.10.2020) 11மணியளவில் ஆரம்பமானது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களும் இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் கடத்தப்பட்டும் கைது செய்யப்பட்டும் காணப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என கோரி கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ;வரவேண்டும்.. வரவேண்டும்.. ...

Read More »

என்னை பிரதான குற்றவாளியாக்குவது நியாயமற்றது

“கடந்த 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்பின் பின்னர் என்னைக் குற்றவாளியாக்குவதில் நியாயமில்லை. எனக்கு தகவல் துணுக்குகள் மட்டுமே வழங்கப்பட்டன” என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில் கடந்த செப்.29ஆம் திகதி சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “2019 ஏப்ரல் 19 ஆம் திகதி தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தன இராணுவ புலனாய்வு பணிப்பாளர்கள் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரை உடனடி தாக்குதல் ...

Read More »

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் ! மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் தாக்குதல்!

யாழ்ப்பாணம், நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் தனுரொக்கின் நண்பன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த வன்முறைச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பு.சிவா (வயது -30) அவரது தாயார் ரேணுகா (வயது -50) ஆகிய இருவர் மீதே வீடு புகுந்து இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...

Read More »