Tag Archives: ஆசிரியர்தெரிவு

எத்தடை வரினும் மாவீரர் நினைவேந்தலை நடத்துவோம்

எதிர்வரும் நவம்பர் 27 மாவீரர் தின நினைவேந்தலை செய்வதற்கு நாம் யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று தாம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மக்கள் உயிரிழந்த தமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதை யாரும் தடுக்க முடியாது. அதேபோல எமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு நாம் யாரிடமும் அனுமதியும் பெறத் தேவையில்லை. எனவே எதிர்வரும் நவம்பர் 27 மாவீரர் தினம் நினைவேந்தல் நிகழ்வு வழமை போல் ...

Read More »

ஸ்கைப் வழியாக ரிஷாத் இன்று சாட்சியம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு ஸ்கைப் வழியாக இன்று (19) நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் சாட்சியமளிக்கவுள்ளார். ஆணைக்குழுவின் நடவடிக்கைகளின் தொடக்கத்தில், பதியுதீனுக்காக ஆஜரான சட்டத்தரணி ருஷ்டி ஹபீப், தனது சாட்சியங்களை தமிழ் மொழியில் வழிநடத்துமாறு தனது வாடிக்கையாளர் கோரியதாக ஆணைக்குழுவுக்குத் தெரிவித்தார். இருப்பினும், ஆணைக்குழுவின் தலைவர், பதியுதீன் ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவுக்கு சிங்கள மொழியில் அறிக்கை அளித்ததாக அறிவித்தார். முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த நாடாளுமன்றதெரிவுக் குழு முன்னிலையில் சிங்களத்தில் பதியுதீன் சாட்சியம் அளித்ததாக ஆணைக்குழு ...

Read More »

கோலான் குன்றில் வெடிபொருட்களை புதைத்த சிரிய படையினர்

இஸ்ரேல் சிரியாவில் சிரிய இராணுவ இலக்குகள் மீதும் ஈரானிய இலக்குகள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலான் குன்றுகள் மீது வெடிபொருட்கள் வைக்கப்பட்டதை தொடர்ந்து சிரியாவின் வடபகுதியில் உள்ளநிலைகள் மீதும் சிரியாவில் உள்ள ஈரானிய நிலைகள் மீதும் வான்தாக்குதலை மேற்கொண்டதாக  இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் வன்முறை காரணமாக சிரிய படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் ஒருவர் காயமடைந்துள்ளார் என சிரிய செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. சிரிய இராணுவநிலைகளையும் ஈரானின் குட்ஸ்படையணியையும் இலக்குவைத்துள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் அவர்களின் ஆயுதகளஞ்சியங்கள் இராணுவ வளாகங்கள் மற்றும் சிரியாவின் ...

Read More »

கொழும்பை முழுமையாக முடக்க அவசியமில்லை

மேல் மாகாணத்தில் கொவிட் 19 நிலவரம் குறித்து  தினமும் மதிப்பாய்வு  செய்யப்படுகிறது.  எனவே, கொழும்பு மாவட்டத்தை முழுமையாக முடக்குவதற்கு அவசியமில்லை. தற்போது அடையாளம் காணப்படுவோரில் பலர் முடக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களென,சிறிலங்கா இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி செயலணி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளை மதிப்பிட்டு வருவதாகவும்   இதனையிட்டு  கொழும்பை முழுமையாக முடக்க தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

நினைவேந்தல் நிகழ்வை தடை செய்யாதிருக்க மனு

எதிர்வரும்   25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை மேற்கொள்ளவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யக் கூடாது என தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட வுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்ப டுத்தல் சட்ட விதிகளையோ காரணங்காட்டி அந்த நினைவேந்தல் நிகழ்வை தடைசெய்யக்கூடாதென மனுவின் ஊடாக ​கோரப்படவுள்ளது. வடக்கு மாகாண மூத்த பிரதி காவல் துறை  மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரியே இந்த மனுக்கள், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில்  தாக்கல் செய்யப்படவுள்ளன. ...

Read More »

3 முக்கிய மாற்றத்தை கொண்டு வந்த ஆஸ்திரேலியா

பிக் பாஷ் டி20 லீக்கில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க 3 முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு. இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 லீக்கை நடத்துவதுபோல் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டும் பிக் பாஷ் லீக் என்ற பெயரில் டி20 லீக்கை நடத்தி வருகிறது. பிக் பாஷ் டி20 லீக்கில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க அடிக்கடி விதிமுறைகளை மாற்றம் செய்யும். கிரிக்கெட்டில் டாஸ் சுண்டுவதற்குப் பதிலாக பேட்டை தூக்கிப்போட்டு மேடா? பள்ளமா? எனக்கேட்கும் முறையை அறிமுகப்படுத்தியது. இந்த சீசனில் மூன்று முக்கிய மாற்றங்களை ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் எளிதில் வெல்ல முடியாது – புஜாரா கருத்து

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் எளிதில் வெற்றி பெற முடியாது என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா தெரிவித்தார். 2018-19-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முதல்முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. 71 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இந்த வெற்றியை சாத்தியமாக்கியது. இந்த தொடரில் புஜாரா 3 சதம் உள்பட 521 ரன்கள் குவித்தார். அதன் பிறகு தற்போது ஆஸ்திரேலியா சென்று இருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா ...

Read More »

உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க சிறிலங்கா  அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும்!

உள்நாட்டு மோதலினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க சிறிலங்கா  அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் சர்வதேச மன்னிப்பு சபை நேற்று (16) இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர் அலுவலக பணிப்பாளர் டேவிட் கிரிஃபித்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நீதி நடைமுறைக்கு வழிவகுத்த ஐக்கிய நாடுகளின் ...

Read More »

“தடுப்பூசியால் மட்டுமே கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது”

“தடுப்பூசியால் மட்டுமே கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்த முடியாது”என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனாம் (Tedros Adhanom) தெரிவித்துள்ளார்.   ஜெனிவாவில் செய்தியாளர்களைச் சந்தித்துக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரவிக்கையில் ” கொரோனாத் தொற்றுக்கான  தடுப்பூசி தற்போதுள்ள கருவிகளுக்கு மாற்றாக அமையாது எனவும், தனிமைப்படுத்துதல் மற்றும் பரிசோதனை தொடர வேண்டும்” எனவும்  தடுப்பூசி கிடைத்ததும் சுகாதாரப் பணியாளர்கள், வயதானவர்கள், பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிப்பதால், இறப்பு எண்ணிக்கையை குறைத்து, சுகாதார அமைப்புகளை ...

Read More »

2021 ஆம் ஆண்டு ராஜபக்‌ஷக்களுக்கே அதிகளவு நிதி ஒதுக்கீடு

கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்காக 267804 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இத்தொகையில் 78227 கோடியே 8091000 ரூபா ராஜபக்சக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்சவினால் இன்று 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திலேயே இத் தொகை ராஜபக்சக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வின் ஜனாதிபதி செலவி னங்களுக்காக 934 கோடியே 5660000 ரூபாவும் ...

Read More »