“தடுப்பூசியால் மட்டுமே கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்த முடியாது”என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனாம் (Tedros Adhanom) தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் செய்தியாளர்களைச் சந்தித்துக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரவிக்கையில் ” கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசி தற்போதுள்ள கருவிகளுக்கு மாற்றாக அமையாது எனவும், தனிமைப்படுத்துதல் மற்றும் பரிசோதனை தொடர வேண்டும்” எனவும் தடுப்பூசி கிடைத்ததும் சுகாதாரப் பணியாளர்கள், வயதானவர்கள், பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிப்பதால், இறப்பு எண்ணிக்கையை குறைத்து, சுகாதார அமைப்புகளை சமாளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal