மேல் மாகாணத்தில் கொவிட் 19 நிலவரம் குறித்து தினமும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. எனவே, கொழும்பு மாவட்டத்தை முழுமையாக முடக்குவதற்கு அவசியமில்லை. தற்போது அடையாளம் காணப்படுவோரில் பலர் முடக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களென,சிறிலங்கா இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி செயலணி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளை மதிப்பிட்டு வருவதாகவும் இதனையிட்டு கொழும்பை முழுமையாக முடக்க தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal