முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவு இன்று (29) வாக்குமூலம் ஒன்றை பெறவுள்ளது. கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கொரோனா வைரஸ் தொற்றால் மூவர் உயிரிழந்தனரென, தவறான தகவலை வெளியிட்டமை குறித்தே, இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளது. தலாஹேனவில் அமைந்துள்ள சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் வைத்து, குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலத்தை பெறவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ரணில் – சஜித் தலைமையில் தனித்தனி கூட்டம்
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் செயற்குழு கூட்டங்கள் இன்று (29) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம், கோட்டையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் முன்னால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More »ஈரான் மக்களை கொதித்தெழுச் செய்த ஆணவக் கொலை
ஈரானில் 14 வயது சிறுமி ஆணவக் கொலை செய்யப்பட்டது அந்நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 14 வயதான ரோமினா அஷ்ரப்பின் மரணம் தான் ஈரானில் தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரோமினா அஷ்ரப்பின் காதலை ஏற்க முடியாத அவர் தந்தை அவரை ஆணவ கொலை செய்ததாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வடக்கு மேற்கு பகுதியில் இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. இந்த ஆணவ கொலைத் தொடர்பாக ரோமினா அஷ்ரப்பின் தந்தை ரேசா அஷ்ரப் கைது செய்யப்பட்டுள்ளார். ரேசா அஷ்ரப் ...
Read More »ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட வைத்தியர் – வட அயர்லாந்தைச் சேர்ந்த தாதிக்கும் திருமணம்
பிரிட்டன் நாட்டின் மத்திய லண்டன் பகுதியில் செயின்ட் தாமஸ் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் வைத்தியராக பணிபுரிபவர் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட அன்னாலன் நவரத்தினம். இதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிபவர் ஜான் டிப்பிங். இவர் வட அயர்லாந்தைச் சேர்ந்தவர். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இரு வீட்டாரிடமும் திருமணத்துக்கு சம்மதம் பெற்ற நிலையில் வரும் ஆகஸ்ட்மாதம் திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் கரோனா பிரச்சினையால் கடந்த மார்ச் 23-ம் திகதி முதல் பிரிட்டனில் ஊரடங்கு உத்தரவு உள்ளது. எனவே, இருவருடைய பெற்றோரும் வருவதில் சிக்கல் ...
Read More »அவுஸ்திரேலியாவில் பூட்டப்பட்ட அறையில் இரு இளைஞர்கள்! படுக்கையறையில் தந்தையின் சடலம்!
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் பூட்டப்பட்டிருந்த குடியிருப்பு ஒன்றில் இருந்து அரை நிர்வாண கோலத்தில் இரு பதின்ம வயதினரையும், படுக்கையறையில் அவர்களின் தந்தையின் சடலத்தையும் காவல் துறையினர் மீட்டுள்ளனர். பிரிஸ்பேன் நகரில் உள்ள அந்த குடியிருப்பில் இருந்து வாய்விட்டு கதறும் சத்தம் தொடர்ந்து கேட்டுவந்ததையடுத்து, அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்க தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறை , பூட்டப்பட்டிருந்த குடியிருப்பின் உள்ளே புகுந்து பார்த்தபோது அதிர்ந்து போயுள்ளனர். ஒரு அறையில் அரை நிர்வாண கோலத்தில் 17 மற்றும் 19 வயது இளைஞர்கள் பூட்டி ...
Read More »சீன நாடாளுமன்றத்தில் நிறைவேறியது புதிய பாதுகாப்பு சட்டமூலம்
சீன நாடாளுமன்றம் ஹொங்கொங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டமூலத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஹொங்கொங், சீனாவின் ஆளுகையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சிப் பிரதேசமாகும். அங்கே வெளியுறவு, இராணுவம் ஆகிய இரு துறைகளையும் சீனா கட்டுப்படுத்தும். ஏனைய அனைத்துத் துறைகளையும் ஹொங்கொங் அரசே நிர்வகிக்கும். 70 லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஹொங்கொங் பல தசாப்த காலமாக இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. 1997 ஆம் ஆண்டு ஹொங்கொங்கை, இங்கிலாந்து சீனாவிடம் ஒப்படைத்தது. அந்தநாள் முதல் இன்று வரை ஹொங்கொங், சீனாவின் காட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ...
Read More »மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு
ஜுன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான நாளை (29) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் 8ஆவது நாளாக இன்று (28)இடம்பெற்றது.
Read More »ஆறுமுகன் தொண்டமானுக்கு நாடாளுமன்றில் இறுதி அஞ்சலி
மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு நாடாளுமன்றத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கியப் பேழையை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு எடுத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அன்னாரின் பூதவுடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Read More »கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகள்
ஐதராபாத் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஐதாராபாத் காந்தி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தாலும், மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க உதவி புரிந்து வருகிறார்கள். கடந்த 8-ந்திகதி கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் கர்ப்பிணி பெண் குழந்தை பெற்றெடுத்தாள். அதன்பின் ஏராளமான பெண்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தெலுங்காவில் இருந்து வந்த பெண்ணுக்கு நேற்று ஆரோக்கியமான ...
Read More »இன்றுமட்டும் 134 புதிய தொற்றாளர்கள் இனங் காணப்பட்டனர்
இலங்கையில் இன்றுமட்டும் 134 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை வரலாற்றில் இன்றும் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியமை இன்றேயாகும். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 732 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 711 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Read More »