முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவு இன்று (29) வாக்குமூலம் ஒன்றை பெறவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கொரோனா வைரஸ் தொற்றால் மூவர் உயிரிழந்தனரென, தவறான தகவலை வெளியிட்டமை குறித்தே, இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
தலாஹேனவில் அமைந்துள்ள சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் வைத்து, குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலத்தை பெறவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal