இலங்கையில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகம் தெரிவித்துள்ளது. அதில் பிரதானமான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனயவுப் பிரிவின் பொறுப்பில் 26 சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக காவல் துறை பேச்சாளர் காவல் துறை அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த 26 பேரில் சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்கள் பலரும், ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
கொச்சிக்கடையில் வெடிப்பு சம்பவம்!
கொச்சிக்கடை பகுதியில் சற்றுமுன்னர் மற்றுமொரு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்துக்கு அருகிலிருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் கிடைக்கப்பெற்ற பொதியொன்றை பரிசீலனை செய்வதற்காக எடுக்க முற்பட்ட போதே, குறித்த பார்சல் வெடித்து சிதறியுள்ளது.
Read More »கொழும்பு புறக்கோட்டையில் வெடிபொருட்கள் மீட்பு!
நேற்று 8 இடங்களில், இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில், சுமார் 290 பேர் மரணித்துள்ளதாகவும், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில், சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே நாடு முழுவதும் பெரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு புறக்கோட்டை, பெஸ்தியான் மாவத்தை தனியார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து, 87 டெட்டனேட்டர் வகை வெடிப்பொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளார் தெரிவித்துள்ளார்.
Read More »பாகிஸ்தான், இந்தியப் பிரஜைகள் 12 பேர் கைது!
நேற்று (21) இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு, பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில், பாகிஸ்தான் பிரஜைகள் 9 பேரும் இந்தியப் பிரஜைகள் மூவரும் அடங்குவதாகவும் இந்தியப் பிரஜைகள், வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்தே கைதுசெய்யப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். அவிஸாவலை பிரதேசத்திலுள்ள செப்புக்கம்பி உற்பத்தித் தொழிற்சாலையொன்றில், இவர்கள் பணியாற்றியுள்ளார்கள் என்று, காவல் துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம், தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல் துறையினர் மேலும் கூறினர்.
Read More »கொழும்பின் 6 தாக்குதல்களும் தற்கொலை தாக்குதல்கள் என உறுதி!
கொழும்பில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட 8 தாக்குதல்களுள் 6 தாக்குதல்கள் தற்காலை குண்டு தாக்குதல் என அரச பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் ஷங்கரில்லா, சினமன் கிரேண்ட், கிங்ஸ்பெரி ஹொட்டல் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களே இவ்வாறு தற்கொலை குண்டுத் தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இந்த வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து அரசு ...
Read More »அவுஸ்ரேலியர் ஒருவர் காயம்!
சிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியர்கள் எவரும் நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் உயிரிழக்கவில்லை என்று அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார். எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார்.
Read More »குண்டுவெடிப்பு சம்பவங்கள் – உலக தலைவர்கள் கடும் கண்டம்!
இலங்கையில் ஆலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் உலக தலைவர்கள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா, துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளனர். பிரித்தானியா பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, இலங்கையிலுள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு எதிரான வன்முறை நடவடிக்கைகள் உண்மையிலேயே பயங்கரமானவை. இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நம்பிக்கையை இழக்காமல் செயற்படவேண்டுயம் என்றும் அவர் ...
Read More »சர்வதேச காவல் துறை உதவியை கோருகின்றோம்!
மோசமான தொடர்குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெறும் அச்சுறுத்தல் ஏற்கனவே விடுக்கப்பட்ட போதும் அதுகுறித்து பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தாதும் , எமக்கு அறியப்படுத்ததும் பாரதூரமான பிரச்சினையாகும் என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறிய சர்வதேச காவல் துறை உதவியை கோருகின்றோம், எமது புலனாய்வு துறையும் இதுகுறித்து ஆராய்ந்து வருகின்றது என்றவும் குறிப்பிட்டார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இரவு விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி இந்தக் கருத்துக்களை ...
Read More »தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வாகனம் சிக்கியது!
தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வான் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று காவல் துறையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 8 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 207 பேர் கொல்லப்பட்ட நிலையில் 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த குண்டு வெடிப்புக்கு குண்டுகளை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று காவல் துறையால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வான் வெள்ளவத்தை பகுதியில் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதன் சாரதியையும் காவல் துறையினர் கைது ...
Read More »மட்டக்களப்பில் குண்டுவெடித்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட மனிதத்தலை!
மட்டக்களப்பில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீட்டு வளாகத்தில் மனிதத் தலையயொன்று கிடைத்துள்ளது. இந்நிலையில், குறித்த மனித தலை யாருடையது என்பது குறித்து விசேட அதிரடிப்படையினரும், குற்றப்புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு நகரில் புனித மைக்கல் கல்லூரிக்கு அருகிலுள்ள சியோன் தேவாலயமொன்றில் இன்று காலை வெடிப்பு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 27 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், தற்போது குண்டு வெடிப்பு இடம்பெற்ற கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீட்டு ...
Read More »