தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வான் மீட்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று காவல் துறையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 8 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 207 பேர்
கொல்லப்பட்ட நிலையில் 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த குண்டு வெடிப்புக்கு குண்டுகளை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று காவல் துறையால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வான் வெள்ளவத்தை பகுதியில் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதன் சாரதியையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal