நேற்று (21) இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு, பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில், பாகிஸ்தான் பிரஜைகள் 9 பேரும் இந்தியப் பிரஜைகள் மூவரும் அடங்குவதாகவும் இந்தியப் பிரஜைகள், வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்தே கைதுசெய்யப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
அவிஸாவலை பிரதேசத்திலுள்ள செப்புக்கம்பி உற்பத்தித் தொழிற்சாலையொன்றில், இவர்கள் பணியாற்றியுள்ளார்கள் என்று, காவல் துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம், தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல் துறையினர் மேலும் கூறினர்.
Eelamurasu Australia Online News Portal