சிறிலங்காவின் இராணுவதளபதி சவேந்திரசில்வாவிற்கு எதிரான பயண தடை குறித்த தனது அதிருப்தியை தெரிவிப்பதற்காக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க தூதுவரை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன சந்திப்பார் எனவும் பயணதடை தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிடுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வழங்குகின்ற முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
பிரான்சில் கொரோனா வைரஸ் நோயால் ஒருவர் மரணம்!
கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 80 வயதுடைய சீன சுற்றுலாப் பயணி ஒருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஆசியாவிற்கு வெளியே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைககள் பலனின்றி ஏற்ட்ட முதலாவது மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை சீனாவில் தற்போத வரை உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை ; 66,492 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 1,524 ஆகவும் உய உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »கூகுள் வரைபடத்தில் தெரியும் விவசாயியின் காதல்!
விளை நிலத்தில் தனது திருமண விருப்பத்தை தெரிவித்த ஜெர்மனி விவசாயியின் நிலம் கூகுள் வரைபடத்தில் முக்கிய இடமாக தெரியும் சம்பவம் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் ஹட்டென்பெர்க் நகரைச் சேர்ந்தவர் ஸ்டெஃபென் ஸ்வார்ஸ் (வயது 32). பகுதி நேர விவசாயியான இவர் தனது மனதை கவர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். அந்த விருப்பத்தை அவரிடம் தெரிவிக்க வித்தியாசமான முயற்சியை கையாண்டார். தனது விளை நிலத்தில் என்னை திருமணம் செய்து கொள்வாயா என மிகப்பெரிய எழுத்துக்களை வரைந்து, அப்பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளில் விதை ...
Read More »பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் விடயத்தில் அமெரிக்கா ஒருபோதும் தடுமாறது!
சிறிலங்காவின் இராணுவதளபதி சவேந்திரசில்வாவிற்கு எதிராக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகளுடன் சவேந்திரசில்வாவிற்கு உள்ள தொடர்புகள் காரணமாகவே அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அவர் தகுதியற்றவர் என அறிவித்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார். யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களிற்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் விடயத்தில் அமெரிக்கா ஒருபோதும் தடுமாறது என அவர் தெரிவித்துள்ளார்.
Read More »சிறிலங்கா இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பயணத்தடை!
சிறிலங்காவின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது. அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்கஇராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது சிறிலங்காவின் இராணுவதளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவருடைய கட்டளை பொறுப்பு காரணமாக பாரியமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற நம்பகதன்மை மிக்க தகவல்கள் காரணமாக, குறிப்பாக 2009 இல் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது சிறிலங்கா இராணுவத்தின் 58 வது படைப்பிரிவு மேற்கொண்ட சட்டவிரோத கொலைகள் காரணமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ...
Read More »மிக் விமான பேரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட உதயங்க வீரதுங்க விமான நிலையத்தில் வைத்து கைது!
மிக் விமான பேரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று காலை நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவர் விசாரணைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Read More »யாழ்.மாவட்டத்துக்கு புதிய அரசாங்க அதிபர் நியமனம்!
யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்க அதிபர் வேதநாயகன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளமை காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இவர் முன்னதாக வாழைச்சேனை, வவுனத்தீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக பதவி வகித்துள்ளார். இதேவேளை, கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பதில் உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் கணபதிப்பிள்ளை மகேசன் செயற்பட்டுள்ளார்.
Read More »சீனாவில் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கிறது!
சீனாவில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,500 -ஐ நெருங்கியுள்ளது. இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார மையம் கூறும்போது, “ சீனாவில் கோவிட்-19 (கரோனா வைரஸ் ) பாதிப்புக்கு நேற்று மட்டும் 121 பேர் பலியாகியுள்ளனர். இதில் ஹுபே மாகாணத்தில் மட்டும் 116 பேர் பலியாகியுள்ளனர். தற்போது சீனாவில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கியுள்ளது. நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 65,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது. சீனாவைத் தவிர 25 நாடுகளில் கோவிட்-19 ...
Read More »அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு!
மனித எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறப்படும் மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் இன்றைய தினம் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார். மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புனர்வாழ்வு வைத்தியசாலைக்கான கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக காணி துப்புரவு பணிகள் இடம்பெற்று வந்தன. இதன்போது, குறித்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் மாங்குளம் காவற்துறையினருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத், அது தொடர்பில் காவற்துறையினர் முல்லைத்தீவு நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.லெனின்குமார், மனித எச்சங்கள் ...
Read More »ஆஸ்திரேலியா காட்டுத்தீ – 113 விலங்கினங்கள் அழிந்துவிடும் ஆபத்து!
ஆஸ்திரேலியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட 113 விலங்கினங்களுக்கு உடனடி உதவி தேவை என்றும், அப்படி உதவி கிடைக்காவிட்டால் விலங்கினங்கள் அழிந்துவிடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் கோடை வெயில் காரணமாக அந்த நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்லாந்து மாகாணங்களில் தொடர்ந்து 6 மாதங்களாக காட்டுத்தீ பற்றி எரிந்தது. இந்த காட்டுத்தீயில் கோலா கரடிகள் உள்ளிட்ட பல அரிய வகை வன உயிரினங்கள் செத்து மடிந்தன. பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன என சுமார் 100 கோடி வன உயிரினங்கள் இந்த ...
Read More »