சிறிலங்கா இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பயணத்தடை!

சிறிலங்காவின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது.

அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்கஇராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது

சிறிலங்காவின் இராணுவதளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவருடைய கட்டளை பொறுப்பு காரணமாக பாரியமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற நம்பகதன்மை மிக்க தகவல்கள் காரணமாக, குறிப்பாக 2009 இல் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது சிறிலங்கா  இராணுவத்தின் 58 வது படைப்பிரிவு மேற்கொண்ட சட்டவிரோத கொலைகள் காரணமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 பிரிவின் கீழ் கோரப்பட்டிருப்பதன் அடிப்படையில அமெரிக்க  இராஜாங்க  செயலாளருக்கு வெளிநாட்டு அதிகாரியொருவர் பாரிய மனித உரிமை மீறல்கள் அல்லது பாரிய ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்ற நம்பகதன்மை மிக்க தகவல்கள் கிடைத்தால் அந்த நபரும் அவருடைய குடும்பத்தவர்களும் அமெரிக்காவிற்குள் நுவைதற்கு தகுதியற்றவர்கள் என இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 தெரிவிக்கின்றது.

சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடைவிதிப்பதற்கு அப்பால் அவருடைய குடும்பத்தவர்களிற்கு எதிராகவும் பயணதடைவிதிக்கப்படுகின்றது.

ஐக்கியநாடுகளும் ஏனைய அமைப்புகளும் முன்வைத்துள்ள ஆவணப்படுத்தியுள்ள சவேந்திர சில்வாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நம்பகதன்மை மிக்கவை என அமெரிக்க இராஜாங்க திணைக்கம் தெரிவித்துள்ளது.