சீனாவில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,500 -ஐ நெருங்கியுள்ளது.
இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார மையம் கூறும்போது, “ சீனாவில் கோவிட்-19 (கரோனா வைரஸ் ) பாதிப்புக்கு நேற்று மட்டும் 121 பேர் பலியாகியுள்ளனர். இதில் ஹுபே மாகாணத்தில் மட்டும் 116 பேர் பலியாகியுள்ளனர்.
தற்போது சீனாவில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கியுள்ளது. நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 65,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
சீனாவைத் தவிர 25 நாடுகளில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பு உள்ளது. இதில் சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகளில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
முன்னதாக, சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. சீனா மட்டுமல்லாமல் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கரோனா வைரஸ் பரவியது கண்டுப்பிடிக்கப்பட்டது.