சிறிலங்காவின் இராணுவதளபதி சவேந்திரசில்வாவிற்கு எதிராக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகளுடன் சவேந்திரசில்வாவிற்கு உள்ள தொடர்புகள் காரணமாகவே அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அவர் தகுதியற்றவர் என அறிவித்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களிற்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் விடயத்தில் அமெரிக்கா ஒருபோதும் தடுமாறது என அவர் தெரிவித்துள்ளார்.